கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிலேயே இலவச மின்சாரம் கொடுக்கும் அரசு நாங்கதான் ... மார்தட்டும் முதல்வர் பழனிச்சாமி

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மக்களவை அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி, இந்தியாவிலேயே வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் கொடுக்கு அரசு தமிழக அரசு தான் என தெரிவித்தார்.

கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பித்துரையை ஆதரித்து கிருஷ்ணராயபுரம் பகுதியில் முதல்வர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

tamilnadu government only give free electricity for people in the country : says cm palanisamy

அப்போது முதல்வர் பழனிச்சாமி பேசுகையில் "கரூரில் 295 கோடி ரூபாயில் மருத்துவக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம். தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் :ரூ.81 கோடி செலவில் 14 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் மாயனூர் பாலப்பணிகள் ஆறரை கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது. அனைத்து பேரூராட்சியிலும் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

 சின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார் சின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்

தைப்பொங்கல் அன்று ரூ.1000 வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அதேபோல் எல்லா தொழிலாளி, விவசாய, கட்டிடத்தொழிலாளிகள் குடும்பத்திற்கும் ரூ.2000 தேர்தல் முடிந்த உடன் வழங்கப்படும். இந்த திட்டத்தை துவக்கி வைத்த போது ஸ்டாலின் தேர்தல் ஆணைத்திடம் புகார் அளித்ததால் வழங்க முடியாமல் போய்விட்டது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். 100 யூனிட்டுக்கு மின்சாரம் இல்லை. இந்தியாவிலேயே வீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் கொடுக்கு அரசு இந்த அரசு... நமக்கு அநீதி இழைத்தவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்" இவ்வாறு கூறினார்.

English summary
CM palanisamy says in karur, Tamilnadu government (aiadmk government) only give free electricity for people in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X