Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவனுக்கு என்ன தெரியும்.. காமராஜர் எப்படி இறந்தார் தெரியுமா.. கொந்தளித்த அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் பாஜக தான் காமராஜர் இறப்பிற்கு காரணம் என்று திருமாவளவன் தெரிவித்ததற்கு, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.. ஆளுக்கு ஒரு பக்கம் தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!
இந்த முறை திமுக மட்டுமே கூட்டணியாக போட்டியிடுகிறது.. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகள் தனித்தனியாகவே களம் காணுகின்றன..

திருமாவளவன்

திருமாவளவன்

இந்நிலையில் விசிக மற்றும் திமுக கூட்டணியை ஆதரித்து மதுரையில் விசிக நிறுவனர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது அவர் பேசும்போது, பாஜக - ஆர்எஸ்எஸ் கொள்கையே ஜாதிகளை கூறி பிரிவை ஏற்படுத்துவது தான்... இவர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். பாஜகவில் தலித்துக்கள் இணைவது மிகப் பெரிய ஆபத்து...என்னுடைய பேச்சுக்களால் மத்திய இணை அமைச்சர் முருகன் அச்சப்படுவதாக சொல்கிறார்.. விநாயகர் சிலையை கொடுத்து தலித்துக்களிடையே ஊடுருவ பார்க்கின்றனர்.

 பழனிசாமி

பழனிசாமி

தலித்துகளை எந்த பெயரில் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை விடமாட்டேன். தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் அது பாஜக ஆட்சியாக தான் இருக்கும்... அப்போது பன்னீர்செல்வம், பழனிசாமி பேச மாட்டார்கள். அவர்களுக்கு பதில் எச்.ராஜா போன்றோர் பேட்டி கொடுப்பார்கள் என்றார்... திருமாவளவனின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.

 பாஜக வேட்பாளர்கள்

பாஜக வேட்பாளர்கள்

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அர்ஜூன் சம்பத்திடம் திருமாவளவன் குறித்த ஒரு கேள்வியை முன்வைத்தனர். திருமாவளவன், மதுரை பிரச்சாரத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் பாஜக தான் காமராஜர் இறப்பிற்கு காரணம் என்று சொல்லி வருகின்றாரே என்று கேட்டனர்.

 காமராஜர்

காமராஜர்

அதற்கு அர்ஜுன் சம்பத், "பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை ஏற்படுத்திய நிலையில், ஜனசங்கத்தின் சேர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்... நாங்கள் பாடுபட்ட பெற்ற சுதந்திரம் போய்விட்டதே என்ற வருத்தத்திலேயே காமராஜர் இறந்தது அனைவருக்கும் தெரியும்.. திருமாவளவன் அது தெரியாமல் பேசி வருகின்றார். உள்நோக்கத்துடன் பேசி கொண்டிருக்கிறார்.. அவருக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

 அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

தொடர்ந்து திமுக அரசை பற்றி அர்ஜுன் சம்பத் சொல்லும்போது, "இந்த தேர்தலில் கடந்த திமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை.. மக்கள் ரொம்ப பாதித்து இருக்கறார்கள்.. ஒரு வெறுப்பு இருக்கும்.. அந்த வெறுப்பு இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.. அதில் இருந்து திமுக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. இந்த தேர்தலை அரசு அதிகாரிகள், தமிழ்நாடு தேர்தலை வைத்து நடத்த முயற்சி செய்கிறது.. ஜனநாயகம் என்பதை பணநாயகம் என்றுமாற்றிவிட்டது திமுக.

காவல்துறை

காவல்துறை

பொதுமக்களே கையும் களவுமா பிடிச்சு தந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை..இது வெளிப்படையாகவே விநியோகம் நடக்கிறது.. வீடியோவே எடுத்து புகார் தந்தாங்க.. அபபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை.. அரசு அதிகாரிகளும், காவல்துறையினரே திமுகவிற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். தமிழக தேர்தல் ஆணையம் திமுக ஆணையமாகவே செயல்பட்டு வருகின்றது. ஆகவே பல்வேறு இடங்களில் வீடியோ எடுத்துக்கொடுத்தும் எந்த வித பயனுமில்லை, திமுகவினர் அராஜகம் அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் திமுக ஆணையமாக உள்ளது.. ஆகவே தமிழக கவர்னர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்..

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இங்குள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவையில் முகாமிட்டுள்ளதோடு பரிசுப்பொருட்களையும் கொடுத்து வருகின்றார். செந்தில்பாலாஜி, எப்படியும் ஜெயித்து விடலாம் என்று கோவை மக்களை ஏமாற்ற திட்டம் தீட்டி வருகின்றார். கோவை மக்கள் ஹாட் பாக்ஸ்., வெள்ளி கொலுசு, செயின் மற்றும் பணத்திற்கு மயங்க மாட்டார்கள். ஆகவே நிச்சயம் கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக மண்ணை கவ்வும்.

 பாஜக வெற்றி

பாஜக வெற்றி

எங்கு சென்றாலும் மக்கள், பிரதமர் மோடியின் திட்டடங்களை ஆதரிக்கிறார்கள்.. தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம், லஞ்ச ஊழலற்ற ஆட்சி, டிஜிட்டல் இந்தியா இதெல்லாம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மோடியின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் வரவேண்டும்.. இந்த முறை பாஜக தனித்து போட்டியிடுகிறது.. பாஜகவுக்கு முன்பு இருந்ததைவிட 10 மடங்கு ஆதரவு பெருகி உள்ளது.. அதனால் பாஜக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+