உப்புக்கு கூட ஆகாத விஷயம்! “அவர்” உடனடியாக பதவி விலகனும்! போட்டு தாக்கிய திருமாவளவன்! என்ன காரணம்?
கரூர் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவி என்று உறுதிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வழியிலும் உறுதிப்படுத்துகிறார். அதையே அவர் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறார் என விசிக தலைவர் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் அருகே சின்னபணியூரில் விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் ரத்தக்குழாய் வெடித்து இறந்ததையொட்டி, அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சத்தி 55 ஆயிரம் காசோலையை வழங்கினர். அதன் பின்னர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அப்போது பேசிய அவர்," தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவி என்று உறுதிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வழியிலும் உறுதிப்படுத்துகிறார். அதையே அவர் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறார். ஆளுநராக இருந்துகொண்டு RSS காரராக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு அணுகுமுறையாகும்.

நுபுர் சர்மா விவகாரம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி விலகி RSS ரவியாக தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்ற போவதாகவும், இதுவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். இதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நுபுர் சர்மா நபிகள் நாயகத்தைப் பற்றி கொச்சையாக பேசியதை அடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் உப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

உத்திரப் பிரதேச வன்முறை
உத்திரப் பிரதேசத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடந்த இஸ்லாமியர் ஆர்ப்பாட்டத்தில் யோகி அரசு வன்முறையை தூண்டியிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஜாகீர் அகமது என்பவரை வீட்டை புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கியுள்ளது. அவரது மகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். அவர் சமூக நீதிக்காக போராட கூடியவராகவும் இருக்கும் அவர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயலில் யோகி அரசு ஈடுபட்டிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்
கலவரம் மற்றும் பொறுப்பற்ற புல்டோசர் நடவடிக்கைகளுக்காக யோகி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். ஆட்சியில் இருப்பதற்கு குறைந்தபட்ச தகுதி கூட இல்லை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார் உத்தரபிரதேச முதல்வர். அவரது போக்கை மிக வன்மையாக கண்டிக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி" என தொல் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான்












Click it and Unblock the Notifications