விஜய் பேசிக்கொண்டிருந்தபோது நடந்தது என்ன? உயிரிழப்புக்கு காரணம்.. கூட்டத்தில் பங்கேற்ற பெண் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கரூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.

விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே பலரும் நெருங்கி முண்டியடித்தனர். எல்லாரும் தூரமாக தான் நின்றார்கள். விஜய் பேசுவது கேட்கவில்லை என்பதால் சிலர் முண்டியடித்தார்கள் என்றும், நகரக் கூட இடம் இல்லை.. மூச்சு விடவே முடியவில்லை என கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறினார். நான், எங்கள் குடும்பத்தினர் என எல்லாரும் மூச்சு விட முடியாமல் தவித்தோம்.. இங்கே இருந்தவர்கள் தான் காப்பாற்றினர் என்று அவர் கூறினார்.

what-happened-while-vijay-was-speaking-woman-at-the-event-speaks-out-on-tragedy-and-cause-of-death

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் தொடர்ந்து கரூரில் பிரச்சாரம் செய்தார். ஆனால் வழி நெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்ததாலும், தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் கூடியதாலும் விஜய்யின் பரப்புரை வாகனம் மெதுவாகவே ஊர்ந்து வந்தது.

இதனால் மதியம் 12.30 மணியளவில் நடக்க வேண்டிய கரூர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு விஜய் மாலை 6.30 மணியளவிலேயே வந்து சேர முடிந்தது. இதேபோல் அந்த சாலையும் 100 அடி தான் என்பதால் விஜய் வாகனம் உள்ளே வர முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் மெதுவாக ஊர்ந்தபடி விஜய்யின் பரப்புரை வாகனம் உள்ளே வந்தது. இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சிக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 31 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கரூர் நகரை உலுக்கியுள்ளது.

கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே பலரும் நெருங்கி முண்டியடித்தனர். எல்லாரும் தூரமாக தான் நின்றார்கள். விஜய் பேசுவது கேட்கவில்லை என்பதால் சிலர் முண்டியடித்தார்கள் என்றும், நகரக் கூட இடம் இல்லை.. மூச்சு விடவே முடியவில்லை என கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறினார். நான், எங்கள் குடும்பத்தினர் என எல்லாரும் மூச்சு விட முடியாமல் தவித்தோம்.. இங்கே இருந்தவர்கள் தான் காப்பாற்றினர் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+