கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி பதிலடி

Google Oneindia Tamil News

கரூர்: "எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் இணக்கமா இருந்து சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி.எஸ்.டி. கூட கிடைக்கல. காவேரி ஆணையம், கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டதுதான் மிச்சம்" என்று கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் அதிமுக, திமுக இரண்டுமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இதேபோல் அமமுக, மநீம, நாம் தமிழர் உள்பட அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை செய்துவருகின்றன.

What has Edappadi Palanisamy achieved by aligning with the Central Government? jothimani mp

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பரப்புரை செய்தார். நேற்று கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில், பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ".அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.

அதிமுக அடிமையாக இல்லை. மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம்.ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டுவர முடியும்" என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி, தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி. இணக்கமா இருந்து சாதிச்சதுன்னு என்ன? தமிழகத்துக்கு உரிய ஜி.எஸ்.டி. கூட கிடைக்கல. காவேரி ஆணையம், கீழடி, தமிழ் போச்சு, நீட், மின்கோபுரம வந்துச்சு. ஊழல் வழக்கிலிருந்து உங்களை காப்பாத்திகிட்டதுதான் மிச்சம்" என்று கூறியுள்ளார்.

English summary
What has Edappadi Palanisamy achieved by aligning with the Central Government? congress mp jothimani asked in twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X