அப்படியே வெண்ணிலா கபடிக்குழு மாதிரி.. கபடி ஆடிய இளைஞர்.. சட்டென பலியான பரிதாபம்.. கரூரில் சோகம்
கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார்.
கரூர்: கரூரில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கொரானாவுக்கு பிறகு இத்தகைய மாரடைப்புகள் அதிகரிப்பதால் இதுகுறித்து அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாரடைப்பு அச்சம்
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்; கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கொரானாவுக்கு பிறகு..
குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசிகளால்தான் இந்த மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு கூற்று பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் தெரிவித்தார்.

கபடி விளையாடி போது..
இந்நிலையில், கபடி விளையாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கணக்கப்பிள்ளையூர் கிராமம். இங்கு நேற்று கபடி விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்தப் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கபடி ரைடு சென்ற மாணிக்கம் (28) என்ற இளைஞர் திடீரென மைதானத்தில் சாய்ந்தார்.

பரிதாபம்
இதை பார்த்து பதறிபோன சக விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். மாணிக்கம் இறந்ததை அறிந்த அவரது நண்பர்களும், பெற்றோரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications