கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 75 சூப்பர்வைசர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பலருக்கும் மெமோ பறந்துள்ளதால், கொத்துக்கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, காலி மதுப்பாட்டில்களை ஒப்படைப்பவர்களுக்கு 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கவும், அதே போல் 1,000 ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்குவோரிடம் கியூஆர் குறியீடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

TASMAC Krishnagiri

மேலும், காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும்போது அவற்றை ஸ்கேன் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு கடைக்கு 2 ஸ்கேனிங் எந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், புதிய நடைமுறைகளால் விற்பனையில் காலதாமதம் ஏற்படுவதுடன், பணியாளர்களின் பணிச்சுமையும் அதிகரிப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள்.

இதையடுத்து, காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் ஸ்கேனிங் எந்திரங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 110 கடைகளில் பணியாற்றும் 387 பேரில் 115 சூப்பர்வைசர்கள் உள்ளனர். முதற்கட்டமாக இவர்களில் 75 பேரை டாஸ்மாக் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. மேலும் இன்றும் கடைகளை திறக்காமல் இருந்தால் சேல்ஸ்மேன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 960 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பி இருக்கிறது. இதில் 360 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னையின் உள்புற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் நேற்று மதியம் மூடப்பட்டிருந்தது. சேலம் மாவட்டத்தில் 165 மதுக்கடைகளும், நாமக்கல் மாவட்டத்தில் 155 கடைகளும், தர்மபுரியில் 57 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 110 மதுக்கடைகளில் சுமார் 50 கடைகள் மட்டுமே திறந்திருந்த காரணத்தால், நோட்டீஸ் அனுப்பி உள்ளது டாஸ்மாக் நிர்வாகம் அப்படி திறக்காதவர்களை தான் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+