ஷில்பாவுடன் காதல்.. அழகான திருமணம்.. காணாமல் போன மாயம்.. பிணமாக கண்டெடுக்கப்பட்ட அகமது!
சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்த சாப்ட்வேர் இன்ஜினீயரை கடத்தி சென்று, கொடூரமாக கொலையும் செய்து, ரயில்வே தண்டவாளத்தில் சடலத்தை தூக்கி வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் தன்வீர் அகமத். 35 வயதாகிறது. இவர், சென்னையில் உள்ள தனியார் காலேஜில் இன்ஜினீயரிங் படித்தபோது, அதே காலேஜில் படித்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை காதலித்தார். இப்போது அகமதுக்கு 35 வயசு, ஷில்பாவுக்கு 32 வயசு.
தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஷில்பாவை அகமத் கல்யாணம் செய்து கொண்டார். பிறகு அயர்லாந்து நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை கிடைத்து ஷில்பாவுடனே அங்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஷில்பா கர்ப்பமானார். அதனால் அம்மா வீட்டுக்கு ஷில்பா ராயக்கோட்டை வந்திருந்தார். கடந்த ஒரு மாசமாக அங்கதான் இருந்து வந்துள்ளார்.

செல்போன்
இதனிடையே, கடந்த 12ம் தேதி காலை, பெங்களூருவுக்கு சென்ற அகமத், அன்று மாலை 4 மணிக்கு "ஓசூர் வந்துட்டேன்" என்று மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், வீட்டுக்கு வந்து சேரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் பதட்டமடைந்த ஷில்பா மறுநாள், ராயக்கோட்டை போலீசில் புகார் செய்யவும், போலீசாரும் மாயமான அகமதுவை தேட ஆரம்பித்தனர்.

ரத்த காயங்கள்
இந்த சமயத்தில்தான் நேற்று ராயக்கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதை அறிந்து சேலம் ரயில்வே போலீசார் விசாரித்ததில், அது அகமத் என்பது தெரிந்து. அகமதின் தலையின் பின்பக்கம் யாரோ கூர்மையான ஆயுதத்தால் தாக்கி உள்ளனர். உடம்பெல்லாம் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. ரத்தமும் உறைந்து கிடந்தன. அதனால் நேற்றுமுன்தினம் அகமது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஒன்றரை கோடி
காதல் திருமணம் செய்த அகமத்துக்கு, குடும்பத்தினருடன் பிரச்னை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் பெங்களூருவில் ஒன்றரை கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் அகமது. அதனால் காதல் திருமணம் செய்ததால் அவரை கொன்றார்களா, அல்லது சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொன்றார்களா என்பதுதான் தெரியவில்லை.

சித்ரவதை
ஆனால் 12-ம் தேதி முதல் முந்தா நாள் வரை அகமதுவை யாரோ சித்ரவதை செய்துதான் கொன்றிருக்கிறார்கள் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. எனினும் உண்மை காரணத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications