இரவில் பலான தொழில்.. பரலோகம் போகும் அப்பாவி உயிர்கள்.. அம்பலமாகும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இப்படியொரு பெண்ணா? என்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. என்ன நடந்தது? யாரிந்த பெண்? இவரிடம் போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் சென்னையில் உயிரிழந்த நோயாளியின் மரணம் குறித்து உண்மைத்தன்மை வெளிக் கொண்டுவரப்பட்டது.. வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் 48 வயதான கவுஷா பாஷா.. இவரது மனைவி பெயர் மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.. எனவே, கடந்த பிப்ரவரியில் அவர் இறந்துவிட்டார்.. "உடம்பை சரியாக கவனித்து கொள்ளாமல், எங்களையெல்லாம் இப்படி தவிக்க விட்டுட்டு போய்விட்டாரே" என்று குமுறி குமுறி அழுதார் ஷாஜிதா பானு.
போஸ்ட் மார்ட்டம்: இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுஷா பாஷா உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. கவுஷா பாஷாவின் கழுத்து நெரிக்கப்பட்டு, மூச்சு திணறி அவர் இறந்திருப்பதாக ரிப்போர்ட் வந்தது.
இதில் முதல் விசாரணையே, ஷாஜிதா பானுவிடம் போலீசார் நடத்தினார்கள். அப்போதுதான், அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்தனர்.. சில மாதங்களுக்கு முன்புதான், ஷாஜிதா பானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி ஜெயிலுக்கு போனாராம்.. ஜெயிலுக்குள்ளேயே அவருக்கு "பலருடன்" கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது..
ஆத்திரம்: இதை கவுஷா பாஷா கண்டித்ததால், ஆத்திரமடைந்த ஷாஜிதா பானு, உடல்நலம் குன்றி படுக்கையில் கிடந்த கணவரை, தன்னுடைய துப்பட்டாவாலேயே இறுக்கி கொன்றுவிட்டதாக கூறி போலீசாரை அதிர வைத்தார்.
இதோ கிருஷ்ணகிரியிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஓசூர் அட்கோ பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.. 46 வயதாகிறது.. இவர் கல் உடைக்கும் கூலித்தொழிலாளி ஆவார்.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் என்ற பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், பிழைப்புக்காக கிருஷ்ணகிரி வந்துள்ளார்.. இவரது மனைவி பெயர் நந்தினி. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். காபி தூள் தயாரிக்கும் கடையில் நந்தினி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக , டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், போலீசார் விரைந்து சென்று, கோவிந்தராஜ் சடலத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதித்து பார்த்ததில் கோவிந்தராஜனின் கழுத்து நரம்புகள் உடைபட்டிருப்பதை பார்த்து டாக்டர்கள் அதிர்ந்தனர்.
டாக்டர்கள்: கழுத்தை நெரித்து, கோவிந்தராஜை கொன்றதற்கான அடையாளங்கள் இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்..இதையடுத்து, போலீசார் நந்தினியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நந்தினி உண்மையை ஒப்புக் கொண்டார்.. குடிபோதையில் தினமும் வந்து கோவிந்தராஜ் தகராறு செய்து வந்திருக்கிறார்.. இதனால் தம்பதியிடையே தினமும் தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினமும் தன்னிடம் தகராறு செய்ததால், கணவரின் கழுத்தை நெரித்து விட்டதாகவும், அதில் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாகவும் வாக்குமூலம் சொன்னார் நந்தினி.
அம்பலம்: அதுமட்டுமல்ல, போலீசிடமிருந்து தப்பிக்க, பிணத்தை தூக்கில் ஏற்றி, தற்கொலை செய்து கொண்டதாக சொல்லி நாடகம் நடத்தியதாகவும் தெரிவித்தார். இப்போது, நந்தினியை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணை தீவிரமாகி வருகிறது..
கடந்த மாதம் கோவையில் லாவண்யா என்ற பெண்ணும் இப்படித்தான் சிக்கினார்.. இவரது கணவர் பிரபு உடல்நலம் குன்றி படுக்கையில் இருப்பவர்.. மாமியார் கலாவதியுடன் தள்ளுவண்டியில் டிபன்கடை நடத்தி வந்தவர் லாவண்யா.
தள்ளுவண்டி: தள்ளுவண்டி கடைக்கு வந்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பைரே கவுடா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் பிரபுவுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லாவண்யா, பிரவுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து தந்தார். அதனை சாப்பிட்ட பிரபுக்கு உடல் நலம் குன்றிவிட்டது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விஷம் வைத்தும் கணவர் சாகவில்லையே என்று ஆத்திரப்பட்ட லாவண்யா, கணவனின் கழுத்தை டவலால் இறுக்கியே கொன்றுவிட்டார்.
இதுபோல, தங்களது தகாத உறவுக்காக, மனைவிமார்களை, கொலை செய்யும் கணவன்களும் நாளுக்கு நாள் பெருகிவருகிறார்கள்.. இதுபோன்ற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்கள் மட்டும் நம்மிடையே இல்லாவிட்டால், இன்னும் எத்தனை குற்றவாளிகள் தப்பியிருப்பார்களோ??? பறிபோன அப்பாவி உயிர்களுக்கு, கொஞ்சமாவது நியாயம் கிடைத்து வருகிறது என்றால், இதுபோன்ற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்களினால்தான்.. ஆகமொத்தம், தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால், எந்த குடும்பமும் தன்னுடைய நிம்மதியை இழந்துவிடும் போல..!!












Click it and Unblock the Notifications