Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூருக்கு ரோடு சரியில்லை.. கிருஷ்ணகிரி ஹைவேஸில் 18 மணி நேரமா? அப்படியே ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் அரசுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன... இப்போது போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லுாரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சிப்காட் ஜங்ஷன் வரை, 13 கி.மீ., தொலைவில் 6 இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்காரணமாக, நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது..

hosur krishnagiri national highway

அதற்கேற்றவாறு, உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளும், தற்போது மெதுவாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.. இதன்காரணமாகவும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மழை வெள்ளம்: இப்படிப்பட்ட சூழலில் மழைக்காலம் துவங்கிவிட்டது.. கடந்த ஒரு வாரமாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சுற்றிலும் பலத்த மழை பெய்து வருகிறது.. அந்தவகையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், கிருஷ்ணகிரியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

முக்கியமாக, மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்துவரும் பகுதிகளில், பல இடங்களில் மண் சரிந்தது... இதனால் மேம்பால பகுதி சாலையில், மண்ணுடன் மழைநீர் சேர்ந்து சகதியானது..

சர்வீஸ் சாலை: சர்வீஸ் சாலையிலும் வெள்ளப்பெருக்கு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.. இதனால் இரவு 11 மணியளவில் ஓசூர் - கிருஷ்ணகிரி ஹைவேஸின் 2 மார்க்கத்திலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதன்காரணமாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு 52 கிலோ மீட்டர் தூரத்தை பேருந்துகள் கடக்கவே, கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டதாம்.. இதனால் விடிய விடிய வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.. மறுநாள் காலையும் இந்த போக்குவரத்து சீராகவில்லை.. மாலை 4 மணி வரை அதாவது கிட்டத்தட்ட 18 மணி நேரமாக டிராபிக் சீராகவில்லை.. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

பெங்களூர்: மழைக்காலம் என்றில்லை, கிருஷ்ணகிரி சாலையில் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தொடர்கதையாகிவருகிறது.. பெங்களூரில் உள்ள அத்திபெலே என்ற இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 44ல் கிருஷ்ணகிரி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றுவிடுகிறதாம்.. அதனால், பெங்களூரில் இருந்து கிளம்பினாலும்கூட, 4 மணி நேரம் ஆகியும் கிருஷ்ணகிரிக்கு செல்ல முடியவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டிகள். கிருஷ்ணகிரி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரி: தமிழகத்திலேயே அதிக சுங்க தொகையை வசூலிக்கும் சுங்கச்சாவடியாக இது திகழ்வதுடன், அதிகபட்ச டிராபிக் நெரிசலை ஏற்படுத்தும் சுங்கச்சாவடியாகவும் இருக்கிறது. 10 நொடி விதி என்பது வெறும் விதியாகவே இருக்கிறதே தவிர, அதை யாருமே சரியாக பின்பற்றுவதில்லை என்று வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். இந்தியாவில் டாப் 5க்குள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அடங்கியிருப்பதால், இதற்கெல்லாம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+