கிருஷ்ணகிரியில்.. அப்படியே வாயடைத்து போன ஆபீசர்ஸ்.. அதென்ன கொத்து கொத்தாக.. யார் செய்த காரியம் இது?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: சென்னை கொசஸ்தலை ஆற்றை தொடர்ந்து கிருஷ்ணகிரி அணையிலும் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை மணலி புதுநகருக்கு உட்பட்ட கொசத்தலை ஆற்றில் கடந்த 3 நாட்களுக்கு, அந்த பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மீன் பிடிக்க வந்திருக்கிறார்கள். அப்போது, அந்த ஆற்றில் மீன்கள் செத்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து, உடனடியாக ஊர் பெரியவர்களுக்கு தகவல் சொன்னார்கள்.

Krishnagiri KRP Dam and what happened to 7 tonnes of fish Is the water mixed with Chemical sewage

பல்வேறு வகையான மீன்கள் செத்த நிலையில் மிதந்து கிடக்கும் இந்த செய்தியானது அந்தபகுதியை உலுக்கி எடுத்தது.. பிறகு கூடை கூடையாக செத்த மீன்களை அள்ளி சென்றார்கள்.

கொசஸ்தலை: கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் ஏன் இறந்தன? என்று தெரியவில்லை.. இதுகுறித்து போலீசாருக்கும், மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.. ஆற்றில் இறங்கி மீன்களை அள்ளிக்கொண்டிருந்த பொதுமக்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, தண்ணீரின் மாதிரி மற்றும் இறந்து கிடந்த மீன்களின் மாதிரிகளை சேகரித்து அரசு ரசாயன பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னும் இந்த பரிசோதனை ரிசல்ட் வரவில்லை.. ஆனால், அதற்குள் இன்னொரு அதிர்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சமீபத்தில் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்துவிட்டது.

கழிவுநீர்: கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் இந்த அணையில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன...

ஆனால், இந்த மீன்கள் ஏன் இறந்தன என்று தெரியவில்லையாம்.. ஒருவேளை ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். என்கிறார்கள்.. எனினும், அணையிலிருந்து ஆற்றுநீரை, ஆய்வுக்காக அனுப்பி இருப்பதால், அதன் முடிவுகள் வந்தால்தான், மீன்கள் இறப்புக்கானகாரணம் தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

துர்நாற்றம்: மீன்கள் இப்படி இறந்துகிடப்பதால், மீனவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.. நேற்றுவரை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்ததாகவும், இதனால் கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் யாராலுமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு நாற்றம் வீசுகிறதாம்.. இந்த மீன்பிடி தொழிலை நம்பியே 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளபோது, தற்போது மீன்பிடிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+