ஐயோ.. இவரும் ஒரு மனைவியா.. நள்ளிரவில் கணவனை கொன்று.. மிளகாய் தூள் எடுத்து.. கிருஷ்ணகிரி ஷாக்
கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்
கிருஷ்ணகிரி: கணவனை கட்டையால் அடித்து கொன்றதுடன், ஆத்திரம் தீராமல் மனைவி செய்த காரியத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் பதறி போய்விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார்.. 39 வயதாகிறது.. இவர் ஒரு ராணுவ வீரர்.
இவரது மனைவி பெயர் சசிகலா.. இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர் தான.. 3 குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.

தகராறு
கடந்த 2021ல் சசிகலாவின் அப்பா மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார்.. இந்த கொலை சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு வெடித்துள்ளது.. இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.. எனினும், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு வந்ததில் அந்த மனைவி தன் குழந்தைகளுடன் அவரின் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.. நரேஷ்குமார் ராணுவத்துக்கு சென்றுவிட்டார்.. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ராணுவத்தில் இருந்து ஊர் திரும்பிய நரேஷ், சசிகலா வீட்டிற்கு சென்றுள்ளார்..

ஆத்திரம்
அவரை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த வீட்டிற்கு வர அழைத்துள்ளார்... ஆனால், சசிகலா சமாதானம் ஆகவில்லை.. இந்த பேச்சுவார்த்தை இருவருக்கும் சண்டையாக மாறிவிட்டது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நரேஷ்குமார் மனைவியை தாக்கியுள்ளார்... இதனால் கோபமடைந்த, சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் கத்தியை எடுத்து நரேஷ்குமார் மீது சரமாரியாக தாக்கியுள்ளார்...

மிளகாய்பொடி
இதில் நரேஷ்குமாரின் கை, கால், தலை, முகம் என அனைத்து இடங்களிலும் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத சசிகலா, மிளகாய் பொடியை கொண்டு வந்து கணவரின் கண்கள் மற்றும் உடல் முழுவதும் கொட்டினார்.. இதனால் நிலைதடுமாறிய கணவர் அலறினார்.. அப்போதும் ஆத்திரம் தீராத சசிகலா, கீழே கிடந்த கல்லை எடுத்து கொண்டு வந்து மேலும் தாக்கிவிட்டார்..

சிகிச்சை
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் நரேஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்ஆனால், தீவிர சிகிச்சை தந்தும், பலனின்றி இறந்துவிட்டார்.. இந்நிலையில், தாக்குதலில் படுகாயடைந்த சசிகலாவும் ஹாஸ்ப்பிட்டலில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மனைவியை கொலை வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications