இவர் பெயர் தான் கோவிந்தராஜ்.. 15 வயது சிறுமியை மிரட்டி மிரட்டியே.. நடந்த கொடூரம்.. 34 வருசம் ஜெயில்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது,.

Recommended Video

    கிருஷ்ணகிரி: சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்... 34 வருஷம் ஜெயில்... மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி போயர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63). முதியவரான இவர் அந்த பகுதியில் மாடு மேய்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் முதியவருக்கு பேத்தி உறவு முறை ஆவார். இந்த நிலையில் கடந்த 2018&ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    கர்ப்பமான சிறுமி

    கர்ப்பமான சிறுமி

    இதைத் தொடர்ந்து அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் கோவிந்தராஜ் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்தது.

    கோவிந்தராஜ் கைது

    கோவிந்தராஜ் கைது

    இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    10 ஆயிரம் அபராதம்

    10 ஆயிரம் அபராதம்

    வழக்கை விசாரித்த நீதிபதி அண்மையில் தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட முதியவர் கோவந்தராஜூக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    34 வருசம் சிறை

    34 வருசம் சிறை

    பேத்தி முறை உள்ள உறவுக்கார பெண் என தெரிந்தும், அவருடன் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+