2 கைகள் இல்லை! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற தன்னம்பிக்கை மாணவன்!
கிருஷ்ணகிரி: பிறக்கும் போதே 2 கைகள் இல்லாமல் பிறந்த க்ரித்தி வர்மா என்ற மாணவர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தன்னம்பிக்கையால் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
500க்கு 437 மதிப்பெண்கள் பெற்றுள்ள க்ரித்தி வர்மா, நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இவருக்கு ஆசிரியர்கள் மற்றும் நெடுமருதி கிராமமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நெடுமருதி கிராமத்தை சேர்ந்தவர் க்ரித்தி வர்மா. பிறவியிலேயே கைகள் இல்லாத இவர் கல்வி கற்பதில் காட்டிய அக்கறையை கண்டு அவரை அவரது தாயார் படிக்க வைத்து வருகின்றனர்.
க்ரித்தி வர்மா சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டதால் கூலி வேலைக்குச் செல்லும் தாயார் தான் படிக்க வைத்து வருகிறார்.
குடும்பத்தில் வாட்டி வதைக்கும் கஷ்டம், எல்லா மாணவர்களையும் போல் எழுத முடியாத சூழல் என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் படிப்பை மட்டும் கீர்த்தி வர்மா கைவிடவேயில்லை.
இவரது படிப்பாற்றலை கண்டு ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும் இன்று மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.
டியூசன் செல்லாமல், ஸ்பெஷல் கிளாஸ் செல்லாமல் அரசுப்பள்ளியில் படித்து 500க்கு 400 மதிப்பெண்கள் பெற்று தனது தன்னம்பிக்கையால் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கீர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications