இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லையாக. உள்ள ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா உள்பட மற்ற மாநில வாகனங்களில் வருவோரில் இ பாஸ் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு தீவிரம்
தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் இல்லை என்றாலும், கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருவோர் இபாஸ் எடுத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகனங்கள் சோதனை
இதன் அடிப்படையில் தமிழக கர்நாடகா எல்லையிலும், ஆந்திரா எல்லைகளிலும், கேரளாவின் எல்லைகளிலும் 10ம் தேதி முதல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எல்லையில் வாகனங்களில் வருவோரை முககவசம் அணிய வலியுறுத்துகிறார்கள். ரள பதிவெண் கொண்ட வாகனளில் வருவோர் இபாஸ் இருந்தால் தான் அனுமதிக்கிறார்கள்.

இபாஸ் கட்டாயம்
இதனிடையே கர்நாடகா மாநில எல்லையிலும் வாகனங்கள் ஒவ்வொன்றும் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில பதிவு எண் இல்லாத மற்ற மகாராஸ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்கள் கட்டாயம் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எச்சரிக்கை
கர்நாடக மாநில வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் இரண்டு, மூன்று நபர்களுக்கு மிகாமல் வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்படுவதுடன் அதிகமானோர் பயணித்து வரும் கார்களுக்கு வருவாய் அதிகாரிகள் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து வருகின்றனர்.
-
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications