கிருஷ்ணகிரியை பார்த்து மிரளும் பெங்களூர்! ஸ்டாலின் சிக்ஸ்! நினைக்காத வேகத்தில் தொடங்கிய கிகா பணிகள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் கிகா பேக்டரி அமைக்க முதலீடு செய்து இருக்கும் ஓலா நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகளை தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Tamil Nadu investment: OLA giga factory works are in full swing in Krishanagiri

மேலும் 100 GWh மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக மொத்தமாக 7500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.,

கட்டுமான பணிகள் தொடக்கம்: தமிழ்நாட்டில் கிகா பேக்டரி அமைக்க முதலீடு செய்து இருக்கும் ஓலா நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகளை தொடங்கி உள்ளது. நேற்று இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு முதல் பில்லர் எழுப்பப்பட்டது. வரும் பிப்ரவரிக்குள் கட்டுமானம் முடிந்து முதல் கட்ட தயாரிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர்: கிருஷ்ணகிரியில் குவியும் இது போன்ற முதலீடுகள் பெங்களூரை வியப்பில் ஆழத்தி உள்ளன. முக்கியமாக பெங்களூரில் ஓலா ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்குதான் ஓலா நிறுவனத்தின் Lithium ion cell NMC-2170 உருவாக்கப்பட்டது. ஆனால் அதை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டை ஓலா நிறுவனம் அணுகி உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு மூலம் முதலீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும்.

ஒப்பந்தம்: ஒப்பந்தம் பெறுவது தொடங்கி நிலம் வாங்குவது வரை அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக மேற்கொள்ள முடியும். இதனால் பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் எளிதாக முதலீடு செய்கின்றன. இன்னொரு பக்கம் பெங்களூரை விட கிருஷ்ணகிரியில் நிலம் விலை குறைவு. தமிழ்நாடு அரசும் பல்வேறு ஆபர்களை வழங்கி வருகிறது. அரசியல், சமூக சூழ்நிலை தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கிறது என்பதும் முதலீடுகள் இங்கே வர காரணமாக மாறி உள்ளது.

Tamil Nadu investment: OLA giga factory works are in full swing in Krishanagiri

தமிழ்நாடு: ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது.அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழ்நாடு இது தொடர்பான முதலீடுகளை ஈர்க்கிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது.

அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கே உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் ஓலா முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும். ஓலாவை தொடர்ந்து இ வாகனங்களின் உற்பத்தி தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

Tamil Nadu investment: OLA giga factory works are in full swing in Krishanagiri

நிசான்: சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருக்கும் நிசான் நிறுவன ஆலை விரிவுபடுத்தப்பட உள்ளது. முன்பு உள்ள ஆலையில் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன. தற்போது இங்கே புதிய எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,300 கோடி மதிப்பில் முதலீடு செய்யப்படுவதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+