செத்தும் கெடுத்த சிவராமன்.. பள்ளியில் பாலியல் வக்கிரம்! வசமாய் சிக்கிய பெண் முதல்வர்..எஸ்ஐடி அதிரடி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக மற்றொரு பள்ளியில் முகாம் நடத்திய விவகாரத்தில் அப்பள்ளியின் பெண் முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார்.

அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமன் மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை அடுத்து அந்த குழுவினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே சிவராமன் குடும்ப பிரச்சினை காரணமாக எலியை கொல்ல வைக்கப்படும் பசையை தின்று தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார் என கூறுகின்றனர் காவல்துறையினர்,
இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது சிவராமன், போலீசாரை கண்டு தப்பியோட முயன்றதாகவும் இதை அடுத்து அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவராமன் கடந்த 23ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு இடையே சிவராமனின் தந்தை என அசோக்குமார் கடந்த 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளனர். மது போதையில் இருந்த அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் உயிரிழந்தாலும், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினரும் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி என்சிசி முகாம் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சிவராமன், இதே போல மேலும் பல பள்ளிகளில் முகாம் நடத்தி மாணவிகளை வன்கொடுமை செய்தது ஏற்கனவே போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அவர் எந்தெந்த பள்ளிகளில் முகாம் நடத்தினார் என்பது குறித்து தகவல்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்தனர்.
அந்த அடிப்படையில் பர்கூர் அருகே இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் போலி என்சிசி முகாம் நடத்திய சிவராமன் 14 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அப்போதே மாணவி புகாரளித்தும் பள்ளி நிர்வாகத்தினர் அதனை மறைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதனை கண்டு பிடித்த போலீசார், அந்த பள்ளியின் பெண் முதல்வரை கைது செய்திருக்கின்றனர்.
ஆனால் அந்த பள்ளியின் பெயர் மற்றும் முதல்வரின் விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் அந்த பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சிவராமன் எங்கெங்கு முகாம்கள் நடத்தினார் என தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பள்ளி நிர்வாகிகளும் கைது நடவடிக்கைக்கு ஆளாகலாம் என கூறப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications