கட்டிலுக்கு அடியில்.. ஐயோ.. "அந்த" நேரத்திலும் டியூட்டிக்கு போன சித்ரா.. யாரந்த சரோஜா..திணறிய போலீஸ்
கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்
கிருஷ்ணகிரி: ஒரு கொலை சம்பவத்தை, கிட்டத்தட்ட 3 மாதங்கள் கழித்தே போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. மிக மிக சிக்கலான இந்த வழக்கை, ஊத்தங்கரை போலீசார் கையாண்ட விதமும், குற்றவாளிகளை கைது செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. ஆனால் அதைவிட, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 பெண்களும், போலீசாருக்கே ஷாக் தந்துவிட்டார்கள்.. என்ன நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு போலீஸ்காரர்.. ஏட்டுவான இவர் டியூட்டியில் இருந்தபோது நிறைய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
அதனால், இவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.. இவரது மனைவி பெயர் சித்ரா.. 38 வயதாகிறது.. இவரும் ஒரு போலீஸ்.. சிங்காரப்பேட்டை ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்..

ஸ்விட்ச் ஆப்கள்
தம்பதிக்கு 19 வயதில் ஜெகதீஷ் குமார் என்கிற மகன் இருக்கிறார்... இவர்கள் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார்கள்... இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி, திடீரென்று செந்தில்குமாரை காணவில்லை.. இதனால் குடும்பத்தினர் பதறிப்போய், போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் செந்தில்குமாரை தேடி வந்தார்கள்.. ஆனால், எந்த க்ளுவும் கிடைக்கவில்லை.. எனவே, செந்தில்குமாரின் செல்போனை ஆராய முற்பட்டபோது, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆகி இருந்தது.. மகனின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.. இவர்களது கார் டிரைவர் கமல்ராஜ் செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.

வாக்குமூலம்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கடந்த 13ம் தேதி, கார் டிரைவரையும், மகன் ஜெகதீஷையும் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்தனர்.. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை.. மறுநாள் 14ம் தேதி, கிருஷ்ணகிரி கோர்ட்டில் இருவரும் சரண் அடைந்துவிட்டனர்.. பின்னர் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.. அப்போதுதான், செந்தில்குமாரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி ஊத்தங்கரை பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதாக இருவரும் ஒப்புக் கொண்டனர். கூலிப்படை ஏவி, கணவரை கொலை செய்ய சொன்னதே சித்ராதானாம்.

டிரைவர் உறவு
சித்ரா போலீசில் சொன்னதாவது: நாங்கள் பணிபுரிந்த காலத்தில், 2பேரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கினோம்.. அதற்கு பிறகு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் என் கணவரை பணி நீக்கம் செய்துவிட்டனர்.. அதனால், கடந்த 2008ம் ஆண்டு முதலே, கார் ஒன்றை விலைக்கு வாங்கி ஓட்டிவந்தார்.. என் கணவரிடம் கமல் ராஜ் என்பவர் டிரைவராக வேலை பார்த்தார்... முதலில் அவருடன் நான் சாதாரணமாக பழகினேன்... இந்த பழக்கம் கள்ள உறவாக மாறிவிட்டது.. ஆனால், என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது... இதை பற்றி நான் எதுவுமே என் கணவரை கேட்டதில்லை.

கண்ணாலேயே
அதனால், என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், கமல்ராஜை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். கமல்ராஜ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றது என் கணவருக்கு தெரிந்து விட்டது. எங்களை கண்டித்தார்... ஒரு நாள் நாங்கள் தனிமையில் இருந்ததை கணவர் கண்ணாலேயே பார்த்து விட்டார்... அதனால் ஆத்திரமடைந்த வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தார்... அவரது நடவடிக்கையை பார்த்ததுமே, எங்களை பிரித்து விடுவார் என்று நினைத்தோம்.. அதனாலேயே கள்ள உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்தோம் என்றார்.

உருட்டி உருட்டி
கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.. 1997-ல் போலீஸ் வேலைக்கு சேர்ந்துள்ளார்.. ஆனால் வேலையில் சேர்ந்தது முதலே லஞ்சம் வாங்கி வந்தததாக தெரிகிறது.. மேலும், கடந்த 2009-ல் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி, ஆய்வாளராக பணிபுரிந்த முரளி என்பவர் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால், அவரது ஜீப்பபை கடத்தி சென்று, தொப்பூர் காட்டில் உள்ள கணவாயில் உருட்டி விட்டாராம் செந்தில்குமார்.. இந்த காரணத்திற்காகவே செந்தில்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பும், ஆயுதப்படை போலீஸ் ஜீப்பை, பாரூர் பெரிய ஏரியில் தள்ளிவிட்டாராம்.. இது பற்றிய புகாரும் நிலுவையில் இருந்த நிலையில், வேறு வழியின்றி கடந்த 2012ல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சரோஜா சரோஜா
ஆனால், அப்போதும் செந்தில்குமார் திருந்தவேயில்லை.. பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதற்கிடையே கணவன் - மனைவிக்கு இடையே நிறைய சண்டைகள் வந்துபோயுள்ளன.. எனவே தம்பதியினர் வேறு வேறு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.. தனி பங்களாவில் சித்ரா தங்கியிருந்ததால், அந்த வீட்டுக்கு கள்ளக்காதலன் கமல்ராஜ் அடிக்கடி வந்து போயுள்ளார்.. உறவுக்கு தடையாக இருப்பதால், கணவனை கொல்ல கூலிப்படை புரோக்கர் சரோஜாவை சந்தித்து பேசியிருக்கிறார் சித்ரா.. செந்தில்குமாரை கொலை செய்ய 10 லட்சம் கேட்டாராம் சரோஜா.. கடைசியில் 7 லட்சம் பேரம் பேசி முடித்துள்ளனர்..

மிளகாய் தூள்
செந்தில்குமாரை முதலில், மறைந்திருந்து தாக்கி உள்ளனர் கூலிப்படையினர்.. மிளகாய் பொடியை தூவி, சுத்தியால் தலையில் அடித்து தாக்கி உள்ளனர்.. செந்தில்குமார் மயங்கி விழுந்ததும், அவரை அரிசிப்பையால் சுற்றி மூட்டை கட்டி, வீட்டிலேயே கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, தங்கள் வேலை முடிந்தது என்று கூலிப்படையினர் சென்றுவிட்டார்களாம்.. வீட்டில் பிணமூட்டை இருந்த நிலையில், சித்ரா அன்றைக்கும் டியூட்டிக்கு போய் வந்துள்ளார்.. பிறகு டியூட்டியில் இருந்து திரும்பி வந்ததும், உடலை எப்படி மறைப்பது என்று தவித்து, மறுபடியும் சரோஜா உதவியை நாடியுள்ளார்.. பிறகுதான் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் எரித்து விடுவதாக சொல்லி, மூட்டையை தூக்கி சென்றுள்ளனர்..

பாழடைஞ்ச கிணறு
ஆனால், நீண்ட துரம் எடுத்து சென்றால், விடிந்ததும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தினால், பாதிவழியில் பாழடைந்து கிடந்த, பாரதிபுரத்தில் உள்ள கிணற்றில் மூட்டையை வீசிவிட்டு வந்துள்ளனர்.. இந்த கிணறு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இருப்பதால், 3 மாதங்கள் ஆகியும் போலீசாரால் சடலத்தை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.. இப்போதுதான் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த கொலையில் மேலும் 8 பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களாம்.. அவர்களை எல்லாம் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. சித்ராவும், சரோஜாவும் மட்டுமே இத்தனை சதிவேலைகளையும் செய்துள்ளனர்.. 2 பெண்களும் ஜெயிலில் இருக்கிறார்கள்.. விசாரணை நடக்கிறது..!!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications