லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசமாக மாட்டிக் கொண்ட இங்கிலாந்து... 85 பேரில் ஒருவருக்கு கொரோனாவாம்... அதிர்ச்சி தகவல்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் டிசம்பர் 18-க்கு பிறகு கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ளதாகவும், அதாவது 85 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்டுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று மக்களை அச்சறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் இங்கிலாந்து உடனான எல்லை தொடர்பை துண்டித்து வருவதால் இங்கிலாந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

1-in-85 people infected covid 19 in england

அங்கு உருமாறிய கொரோனா தொற்றால் டிசம்பர் இரண்டாம் பாதிப்பு பிறகு அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் கூறுகையில்,இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு, லண்டனில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக லண்டனில் மிக அதிக பாதிப்பு பதிவாகி வருகிறது.டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் பாதிப்புகள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன. அதாவது 85 பேரை பரிசோதனை செய்தால் அதில் ஒருவருக்கு பாதிப்பு இருக்கும் அளவுக்கு கொரோனா அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுபோதாதென்று உருமாறிய கொரோனா வைரஸ் முந்தைய வைரசை விட 56% அதிகமாக பரவக்கூடியது என்ற இன்னொரு ஷாக் தகவல்களும் வந்துள்ளன. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிஷன் நடத்திய ஆய்வில், புதிய ருமாறிய கொரோனா வைரஸ் 56% அதிகமாக பரவக்கூடியது. அடுத்த ஆண்டுகளில் இந்த வைரசால் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், பலர் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ஆனலும் இந்த வைரஸ் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தமா? அல்லது அதற்கு குறைவாக பாதிப்பு ஏற்படுத்தடுமா? என்பதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுளள்து.

English summary
Shocking reports show that coronavirus infection is the highest in the UK since December 18, with one in 85 people being diagnosed with coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X