லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
லண்டன்: நடுரோட்டில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட சொட்ட ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. சாரதி இல்லாமலலேயே இந்த 2 குதிரைகள் தெறித்து ஓடிய சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
மத்திய லண்டனில் ஆல்ட்விச் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. எந்நேரமும் வாகனங்கள் நடமாட்டமுள்ள பிஸியான சாலை இதுவாகும்.. அப்போது, திடீரென சாலையின் நடுவே 2 குதிரைகள் ஓடிவந்தன..

குதிரைகள்: ஒன்று வெள்ளைக்குதிரை, இன்னொன்று கறுப்பு குதிரையாகும்.. 2 குதிரைகளின் உடம்பிலிருந்தும் ரத்தம் வழிந்தோடுகிறது.. சாரதி இல்லாமல், ரத்தம் சொட்ட சொட்ட இந்த காட்சிதான் வீடியோவாகவும் இணையத்தில் வெளியாகி உள்ளது..
இதை பார்த்த இணையவாசிகள் பதறிப்போய்விட்டார்கள்.. அந்த குதிரைகள் சாலையில் வேகமாக ஓடும் போது எதிரே வந்த வாகனங்களில் மோதியதால் குதிரைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
காயங்கள்: இதுகுறித்து வெளியான முதல்கட்ட தகவலில், 5 குதிரைகள் தங்கள் பகல் நேர உடற்பயிற்சியின்போது தப்பித்துவிட்டதாம்.. அதில் 2 குதிரைகள் இப்போது பிடிபட்டுள்ளதாக லண்டன் நகர போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து லண்டன் காவல்துறை சொல்லும்போது, "பல குதிரைகள் சாலையில் ஓடுவதாக தகவல் கிடைத்துள்ளது.. அவற்றை பிடிக்க ராணுவ உதவியுடன் பணியாற்றி வருகின்றோம்" என்று தெரிவித்திருந்தனர். காயம்பட்ட 2 குதிரைகளையும் மீட்டு கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்ல போகிறார்களாம்..
பரபரப்பு: இதனிடையே, அந்த குதிரைகளுடன் பல வாகனங்கள் மோதும் சூழல் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்துடன் ஒரு குதிரை மோதியதாகவும் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். மத்திய லண்டனில் பரபரப்பான சாலை நடுவே கடிவாளம் பூட்டப்பட்ட 2 குதிரைகளும் ஓடும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications