'ஹலோ மை டியர்'.. பிரிக்கவேயில்ல.. 100 வருடம் முன்பு எழுதிய லெட்டர்.. கரெக்ட்டா வந்து சேர்ந்துடுச்சாம்

தமிழ்நாட்டுடன் இக்காலத்தை ஒப்பிடுகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையில் திறந்து 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதேபோல எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஆளுமைகள் பிறந்த ஆண்டுதான் 1916.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: முதலாம் உலகப்போருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சரியான முகவரிக்கு சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

கடிதங்கள் தாமதமாக வருவது நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். ஆனால், இங்கிலாந்திலும் இது போன்று நடந்திருக்கிறது. ஆம் மக்களே கடந்த 1916ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதமானது கடந்த 2021ம் ஆண்டு லண்டனில் உள்ள ஒரு முகவரிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இக்கடிதத்தை பெற்றவர் தற்போதுதான் இச்சம்பவம் குறித்து கூறியுள்ளார். கடிதத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் அரியனை ஏறிய ஹரோல்ட் வில்சன் மற்றும் சர் எட்வர்ட் ஹீத் இருவரும் ஆகியோர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிறந்தனர்.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பின்னர் கடிதம் கிடைத்தது ஆச்சரியமாக இருந்தாலும், ஏன் இவ்வளவு தாமதம் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இது தொடர்பாக பிரிட்டனின் தபால் துறையான ராயல் மெயில் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து குழப்பமாக இருக்கிறது. இதில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை" என்று கூறியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கிரிஸ்டல் பேலஸ், ஹேம்லெட் சாலையில் உள்ள ஃபின்லே க்ளென் என்பவரின் வீட்டுக்கு இந்த மெயில் வந்து சேர்ந்திருக்கிறது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இந்த கடிதம் தொடர்பாக ஃபின்லே க்ளென் கூறுகையில், "100 ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இந்த கடிதம் வந்து சேர்ந்தது என்பது குறித்து நாங்கள் மிகுந்த ஆச்சரியமாக உள்ளோம்" என்று கூறியுள்ளார். இந்த கடிதம் தற்போது வரை சீல் பிரிக்கப்படாமல் இருந்த நிலையில் அதை திறந்து படிக்கலாமா? வேண்டாமா? என்று ஃபின்லே க்ளென் யோசித்துள்ளார். ஏனெனில் 2000ம் ஆண்டு திருத்தப்பட்ட அஞ்சல் சட்டத்தின்படி பிரிக்கப்படாத கடிதத்தை சம்பந்தமில்லாதவர்கள் திறந்து படிப்பது குற்றமாகும். ஆனால் இக்கடிதம் எழுத்தப்பட்ட ஆண்டான 1916ல் இப்படி எந்த சட்டமும் அமலில் இருக்கவில்லை.

கன்பியூஷன்

கன்பியூஷன்

எனவே கடிதத்தை திறக்கலாமா? வேண்டாமா? என நீண்ட நேரமாக யோசித்து பின்னர் கடிதத்தை திறந்து படித்துள்ளார். இக்கடிதம் 1916ம் ஆண்டு லண்டனில் வாழ்ந்து வந்த உள்ளூர் முத்திரைத்தாள் வியாபாரியான ஓஸ்வால்ட் மார்ஷ் தனது மனைவிக்கு எழுதியிருக்கிறார். கடிதம் எனதருமை கேட்டிக்கு.. என்று தொடங்குகிறது. கடிதத்தின் மொத்த விவரங்களையும் ஃபின்லே க்ளென் கூறவில்லை. அக்காலத்தில் ஓஸ்வால்ட் மார்ஷ் முத்திரைத்தாள் விற்பதில் மிகவும் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் அவருக்கு எது போலி எது நிஜம் என்றும் கண்டுபிடிக்கத் தெரியும். எனவே பலமுறை நீதிமன்றங்களில் இப்பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.

பணக்காரர்களின் நகரம்

பணக்காரர்களின் நகரம்

இதை ஓஸ்வால்ட் மார்ஷ் எழுதும்போது இங்கிலாந்தின் 'பாத்' நகரத்தில் இருந்திருக்கிறார். அங்கு குடும்ப நண்பரான கிறிஸ்டபெல் மென்னெல்லுடன் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்துள்ளார். அக்காலத்தில் குறிப்பாக 1800களின் இறுதியில் 'பாத்' நகரத்தில் பணக்காரர்கள் பலர் வசித்து வந்திருக்கிறார்கள். உயர் நடுத்தர வர்கத்தின் குடும்பத்தினருக்கு இந்த இடம் மிகவும் பிடித்தமானதாக 'பாத்' இருந்தது. தமிழ்நாட்டுடன் இக்காலத்தை ஒப்பிடுகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையில் திறந்து 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதேபோல எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஆளுமைகள் பிறந்த ஆண்டுதான் 1916.

தமிழ்நாட்டுடன் ஒப்பீடு

தமிழ்நாட்டுடன் ஒப்பீடு

அப்போது எழுதப்பட்ட கடிதம் ஒன்று எவ்வித பாதிப்பும் இல்லாமல் நூற்றாண்டுக்கு பின்னர் பத்திரமாக வந்து சேர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கடித்திற்கு உரியவரின் பிள்ளைகள் வந்து கடிதத்தை கேட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "அவர்களிடம் இதனை ஒப்படைக்க தயங்க மாட்டேன். ஆனால் சற்று தாமதமாகலாம்" என்று ஃபின்லே க்ளென் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். நூற்றாண்டின் புன்னகை அவரின் உதட்டில் மின்னி மறைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+