Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலுறவு.. ஜெயிலில் அத்துமீறிய பெண் அதிகாரிகள்.. 'ஆபத்தான' கைதிகளுடன் ஆபாசம்.. கடைசியில் நேர்ந்த கதி

இங்கிலாந்தில் கைதிகளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக சிறைச்சாலை பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் 'கொடூரமான' கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் அதிகாரிகள் சிறை கைதிகளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றத்தாழ்வான சமூகத்தில் குற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இருப்பினும், குற்றவாளிகளின் மனநிலையை சரி செய்ய சிறைச்சாலை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு குற்றம் செய்யும் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும் என சட்டம் வலியுறுத்கிறது. பல நாடுகளில் சிறைச்சாலைகள் மிகவும் கொடூரமானதாக இருக்கிறது. சொல்லப்போனால் ஏதோ தெரியாமல் செய்த தவறுக்காக சிறைக்கு செல்லும் நபர்கள், அங்கு கிடைக்கும் தொடர்புகளை கொண்டுதான் மிகப்பெரிய கிரிமினலாக உருவெடுக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.

எனவே சிறைச்சாலைகளை சரியா பராமரிக்க வேண்டும். இங்குள்ள குற்றவாளிகள் மனம் திரும்ப வேண்டுமெனில் இந்த உலகத்தை சரியாக அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். இந்த கருத்துக்களை மனதில்கொண்டு இங்கிலாந்து அரசு சிறைச்சாலைகளை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது.

 புதுப்பொலிவுடன் சிறைச்சாலை

புதுப்பொலிவுடன் சிறைச்சாலை

அதாவது சிறைச்சாலையில் நூலகம், பெரிய விளையாட்டு மைதானம், தனி நபர்கள் கணினி பயன்படுத்தும் வசதி போன்ற அம்சங்கள் HMP Berwyn சிறைச்சாலையில் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே சிறப்பான ஒரு விஷயம் என மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றிருக்கும் வேளையில் சிலர் இது ஆடம்பர செலவு என்று விமர்சித்துள்ளனர். சிறைவாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் தவறு செய்ய துணிய மாட்டார்கள். எனவே இதுபோன்ற ஆடம்பர செலவுகளை குறைத்துவிட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்க என்ன வழி இருக்கிறது என்பதை பாருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

செக்ஸ்

செக்ஸ்

இப்படி இருக்கையில்தான் HMP Berwyn சிறைச்சாலையில் சில அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது இந்த சிறையில் மேற்குறிப்பிட்டதைப்போல பல ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு சதி செயல்களை செய்தவர்களாகவும், அதை செய்ய திட்டம் போட்டு கொடுத்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், இவர் மனம் திருந்த கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி சிறைச்சாலையில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகளிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறை நிர்வாகம் கூறுகையில், "எங்கள் அதிகாரிகள் இரவும் பகலுமாக காவல்துறையின் பெயரை காப்பாற்ற உழைக்கிறார்கள்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆனால், ஒரு சில அதிகாரிகளின் நடத்தையினால் தற்போது ஒட்டுமொத்த சிறைத்துறை நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் உள்ள ஆபத்தான் கைதிகளுடன் இந்த ஒரு சில அதிகாரிகள் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் செக்ஸ் வைத்திருக்கிறார்கள். இது அனைத்துமே சிறைச்சாலையிலேயே நடந்துள்ளது. இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பெண் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெறுமென பாலியல் குற்றங்களில் மட்டுமல்லாது சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக பொருட்களை கடத்தவும் துணை போயுள்ளனர்.

செலவு

செலவு

இச்சிறைசாலையில் குற்றம் செய்த மொத்த அதிகாரிகளையும் நாங்கள் களையெடுத்துள்ளோம். மீதமுள்ள அதிகாரிகளுக்கு இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளனர். சிறை கைதிகளை குற்ற மனநிலையிலிருந்து மீட்டெடுக்க இந்த சிறைச்சாலைக்கு மட்டும் இங்கிலாந்து அரசு சுமார் 24 ஆயிரம் கோடியை இதுவரை செலவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+