யாரு இவங்க? 2 உலக போர்.. 22 பிரதமர்களை பார்த்தாச்சாமே! 106 ஆண்டாய் ஒரே வீட்டில் வாழும் அதிசய பாட்டி!
லண்டன்: பிரிட்டனில் ஒரே வீட்டில் 105 வரும் வாழ்ந்து வரும் மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அவர் பிறந்ததிலிருந்து ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.
இந்த உலகம் விசித்திரமானது. இந்த விசித்திரமான உலகில் உயிர்கள் பிழைத்திருக்க புலம் பெயர வேண்டியது அவசியமாகும். பறவைகள் தொடங்கி மனிதர்கள் வரை இந்த புலம் பெயர்தல் நடக்கிறது. ஆனால், இப்படி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் புலம் பெயராத, பிறந்தது முதல் ஒரே இடத்தில் ஒருவர் தங்கி இருக்கிறார் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் நிஜமும் கூட. பிரிட்டனில் 105 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் தான் பிறந்தது முதல் ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.

எல்சி ஆல்காக் எனும் இந்த பாட்டி நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ஹுத்வைட்டில் உள்ள ஓர் வீட்டில் பிறந்திருக்கிறார். தொடக்கத்தில் இந்த இடத்தில் வாடகைக்கு இருந்த அவரது குடும்பம் பின்னர் இதனை சொந்தமாக வாங்கியது. இவர்கள் வாங்கும் போது இந்த வீட்டின் மதிப்பு வெறும் ரூ.26 ஆயிரம்தான். அப்புறம் என்ன ஒரே ஜாலிதான். வீட்டில் தனக்கு பிடித்தமான ரூமை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் தனக்கு பிடித்த பொருட்களை சேகரித்து வைக்க தொடங்கியுள்ளார்.
திருமணம், குழந்தைகள் என அனைத்தும் இதே வீட்டில் இருந்தபடி நடந்திருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும், எல்சி மட்டும் இந்த வீட்டின் மீதான பிடியை கொஞ்சம் கூட தளரவிடவில்லை. வீடு எவ்வளவோ மாற்றங்களை கண்டுவிட்டது. ஆனால் பாட்டி விட்டுக்கொடுக்கவில்லை. கணவர் இறந்துவிட்டார். ஒரு கட்டத்தில் தாய் தந்தையும் இறந்துவிட்டனர். மறுபுறம் மகன்களோ வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் பாட்டி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதே வீட்டில் இவர் இரண்டு உலகப் போர்கள், 22 பிரிட்டிஷ் பிரதமர்கள் என அனைத்தையும் பார்த்திருக்கிறார். தற்போது தனது 76 வயது மகன் ரேமனோடு வசித்து வருகிறார். இது குறித்து ரேமன்ட் கூறுகையில், "அம்மாவுக்கு வயதுதான் 105, ஆனால் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். வீடு முழுவதும் பம்பரமாக சுற்றுகிறார். அவருக்கு எந்த பொருள் எங்கே வைத்தோம் என்று சரியாக தெரியும். அந்த அளவுக்கு அபாரமான நினைவு திறன்" என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த பாட்டியின் வீடு சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இந்த வீட்டையும், பாட்டியையும் வந்து பார்த்து செல்கின்றனர். நீங்களும் பிரிட்டன் போனால் ஒரு போய் பார்த்துவிட்டு ஹாய் சொல்விட்டு வாருங்களேன்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications