லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா... குடியரசு தின விழாவில்... போரிஸ் ஜான்சன் பங்கேற்பதில் சிக்கல்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவர் திட்டமிட்டபடி இந்தியா வரமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடர்ந்தால் போரிஸ் ஜான்சனின் இந்தியா சுற்றுப் பயணம் சாத்தியம் இருக்காது என்று இங்கிலாந்து மருத்துவ சங்க கவுன்சிலின் தலைவர் தெரிவித்தார்.

Boris Johnsons India Trip may not be possible

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர்போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார். அதன்பின்பு இந்திய இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க போரிஸ் ஜான்சன் சம்மதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் திட்டமிட்டபடி இந்திய சுற்றுப்பயணம் வர முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஏனென்றால் தற்போது இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அங்கு இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. குடியரசு தின விழாவுக்கு இன்னும் சில வாரங்கள் இருந்தாலும், கொரோனா பாதிப்பு குறையாக இருந்தாலும் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதில் பாதிப்பு ஏற்படும்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை- அரசு விளக்கம்இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை- அரசு விளக்கம்

எனவே அவரது இந்திய பயணத்திற்கு சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மருத்துவ சங்க கவுன்சிலின் தலைவர்அளித்த பேட்டியில் ''தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடருமானால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா பயணம் சாத்தியம் இல்லாமல் போகலாம்.

இன்னும் ஐந்து வாரங்கள் இருப்பதால் இன்று இதுபற்றி முடிவு எடுக்க முடியாது. இருந்தாலும் வைரஸ் உருமாற்றம் தொடர்ந்தால் அவரது இந்தியா சுற்றுப் பயணம் சாத்தியமில்லை.ஆனால் லண்டன் மற்றும் பிற பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதன்பின் வாய்ப்பு இருக்கலாம்'' என்றார்.

English summary
As the Prime Minister of the United Kingdom Boris Johnson was about to attend the Republic Day celebrations in India, the question arose as to whether he could come to India as planned as a new type of corona virus was spreading in the UK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X