லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விறுவிறு ஓட்டுப்பதிவு.. பிரிட்டன் பிரதமராகும் லிஸ் ட்ரஸ்.. இந்திய வம்சாவளி ரிஷிசுனக்கிற்கு பின்னடைவு

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமராகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர் சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் பொருளாதார நிலைமை மோசமானது. இதனை சமாளிக்க முடியாத நிலையில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் வேறுவழியின்றி போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் காபந்து பிரதமராக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது.

 பிரிட்டன் பிரதமர் தேர்தல்: பின் தங்கும் ரிஷி சுனக்.. அடுத்த பிரதமராகிறார் லிஸ் டிரஸ்? பிரிட்டன் பிரதமர் தேர்தல்: பின் தங்கும் ரிஷி சுனக்.. அடுத்த பிரதமராகிறார் லிஸ் டிரஸ்?

ரிஷி சுனக் போட்டி

ரிஷி சுனக் போட்டி

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உள்பட ஏராளமானவர்கள் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதி போட்டியை அடைந்துள்ளனர். இதில் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், லிஸ் ட்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

மாறிய கருத்து கணிப்பு

மாறிய கருத்து கணிப்பு

இதையடுத்து பிரதமர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். துவக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய களநிலவரங்கள் மாற்றமடைந்துள்ளது. ரிஷி சுனக்கை விட லிஸ் ட்ரஸ் முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

ரிஷி சுனக் பின்னடைவு

ரிஷி சுனக் பின்னடைவு

தற்போது பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலையுடன் ஓட்டுப்பதிவு முடிவடைய உள்ளது. இருப்பினும் தற்போதைய நிலவரப்படி பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் ட்ரசுக்கு தான் அதிகமானவர்கள் ஓட்டளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் பெரும்பலானவர்கள் லிஸ் ட்ரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பை இழக்கலாம் என சொல்லப்படுகிறது. பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் தான் வரி குறைப்பை அமலுக்கு கொண்டு வருவதாக லிஸ் ட்ரஸ் கூறியது தான் அவருக்கு தேர்தலில் ஆதரவு அலை வீசுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் செப்டம்பர் 5ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும். அப்போது தான் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் ? என்பது உறுதியாக தெரியவரும்.

பெருமை என்ன?

பெருமை என்ன?

இந்த தேர்தலில் ரிஷி சுனக் பிரதமராக தேர்தலில் வெற்றி பெற்றால் பிரிட்டன் பிரதமராகும் முதல் இந்திய வம்சவாளி என்ற பெருமையை பெறுவார். மாறாக லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றால் பிரிட்டனின் 3வது பெண் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெறுவார். மேலும் தற்போது பிரதமராகும் நபர் 2025 வரை பதவியில் இருப்பார். அதன்பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Who will be the next Prime Minister of Britain? While the election is going on briskly, there are reports that Rishi Sunak of Indian origin has suffered setbacks and Liz Truss, who has competed against him, may win and become the Prime Minister. பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? என்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமராகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X