ஆஹா.. ரிஷி ஹேப்பி நியூர் சொன்னதுமே.. அப்படியே அதிர்ந்த பிரிட்டன்.. தலையில் இடி வேற.. என்னன்னு பாருங்க
லண்டன்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த பிரிட்டன் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்க நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த வாழ்த்து அந்நாட்டு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக மாறியிருப்பதால் அந்நாட்டில் தற்போது வரை அரசில் ஸ்திரமின்மை நீடித்து வருகிறது. ஏற்கெனவே பல பிரதமர்கள் ஆட்சி செய்து ராஜினாமா செய்துவிட்ட நிலையில் தற்போது இந்திய வம்சாவளியினரான போரீஸ் ஜான்சன் புதிய பிரதமராக பதவியேற்று நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க முயன்று வருகிறார்.
ஆனால் பிரெக்சிட், கொரோனா தொற்று, உக்ரைன் ரஷ்யா போர் போன்ற காரணங்களால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பிரிட்டனை முந்தி இருக்கிறது. அடுத்தடுத்து மாறிய பிரதமர்கள் அந்நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடி செய்திருக்கின்றனர். இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரும் சரிவை கண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு
இதனால் பிரிட்டனில் எரிபொருள் தொடங்கி பல்வேறு பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. எனவே இதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான் பிரதமர் ரிஷி சுனக்கின் முக்கிய கடமையாக இருக்கிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரிட்டனில் களைக்கட்ட தொடங்கியுள்ளன. எதிர் வரும் ஆண்டிலாவது இந்த பிரச்னைகள் முடிவுக்கு வர வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் ரிஷி சுனக் அத்துடன் அதிர்ச்சி செய்தி ஒன்றையும் கூறியிருக்கிறார்.

அடுத்த 12 மாதங்கள்
அதாவது, அடுத்த 12 மாதங்களிலும் பிரிட்டனின் பிரச்னை தீர்வுக்கு வராது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி. எனவே 2023ம் ஆண்டும் பிரிட்டன் மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாகதான் இருக்கும் என்று சுனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நெருக்கடியான 12 மாதங்களை கடந்த பின்னர் பிரிட்டன் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கான புத்தாண்டு வாழ்த்தில் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முழு ஆதரவளிப்பதாகவும், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டுவிழா பிரிட்டனை மீண்டும் ஒன்றிணைக்கும் என்று கூறியுள்ளார்.

கடினமான முடிவுகள்
அதேபோல 2022ம் ஆண்டு ஒரு நெருக்கடியான ஆண்டு என்றும், கொரோனா தொற்றிலிருந்து இந்த உலகம் மீண்டதை போல பிரிட்டனும் இந்த நெருக்கடியிலிருந்து மீளும் என்று சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில் இதிலிருந்து மக்களை மீட்க பிரிட்டன் அரசு நியாயமான மற்றும் கடினமான முடிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான முடிவின் காரணமாகதான் எரிபொருளின் விலை அதிகரித்தது எனவும், ஆனால் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் சுனக் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

வாக்குறுதி
அவர் மேலும் கூறியிருப்பதாவது, "வரும் 2023ம் ஆண்டில் பிரச்னை அனைத்தும் முடிந்துவிடும் என்று என்னால் கூறிவிட முடியும். ஆனால் நான் பொய் வாக்குறுதி அளிக்க விரும்பவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னர் உங்கள் அனைவரின் முன்பும் தோன்றி, நான் இந்த நாட்டிற்காக வேலைசெய்வேன் என்று கூறியிருந்தேன் தற்போது வரை அதையேதான் செய்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். சுனக்கின் இந்த புத்தாண்டு வாழ்த்து அறிக்கை பிரிட்டனில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications