அடுத்த பெருந்தொற்று உலகை தாக்குவது கன்பார்ம்... கொரோனாவை விட கொடூரம்.. சர்வதேச வல்லுநர் அலர்ட்
லண்டன்: கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், அடுத்து பெருந்தொற்று நம்மைத் தாக்கத் தயாராக உள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019இல் நம்மை தாக்கிய கொரோனா பெருந்தொற்றால் நாம் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்தோம். இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சரி பொருளாதார இழப்புகளும் சரி மிகப் பெரியது.

கொரோனா: இப்போது நாம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டோம். ஆனால், அடுத்த பெருந்தொற்று தொலைவில் இல்லை என்று இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் எச்சரித்துள்ளார். அவர் உலகை அலற விடப் போகும் அடுத்த பெருந்தொற்று எப்படி இருக்கும்.. அதைத் தடுக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகில் அடுத்த பெருந்தொற்று ஏற்படப் போவது உறுதி என்ற அவர், வரவிருக்கும் அரசு அதற்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். பிரிட்டன் நாட்டில் ஜூலை மாதம் தேர்தல் நடக்கும் நிலையில், அது முக்கியம் தான் என்றாலும் அடுத்து வரும் பெருந்தொற்றுக்கு நாம் தயாராக இருப்பது அதை விட முக்கியம் என்று சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்தார்.
எச்சரிக்கை: இது தொடர்பாக சர் பேட்ரிக் வாலன்ஸ் மேலும் கூறுகையில், "பெருந்தொற்றை கண்காணித்து முன்கூட்டியே கண்டறிவது தான் இதில் ரொம்பவே முக்கியமானது. எனவே, சிறந்த கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியம். மேலும், புதிய பெருந்தொற்று பரவினால் அதைத் தடுக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டாம். எந்த விதத்திலும் தாமதிக்கக்கூடாது.
பெருந்தொற்றை கண்டறியும் முறையை உருவாக்குவது, தடுப்பூசிகள், சிகிச்சை முறை ஆகியவை நம்மிடம் தயாராக இருந்திருந்தால் கொரோனா தொற்றின் பாதிப்பை வெகுவாக குறைத்து இருக்கும். இவற்றை நம்மால் உருவாக்கிவிட முடியும் என்றாலும் சர்வதேச ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் அடுத்த பெருந்தொற்றை தடுக்க ஒத்துழைப்போம் என்று ஜி7 நாடுகள் உறுதியேற்றனர். ஆனால், இப்போது அவர்கள் சுத்தமாக மறந்துவிட்டனர்.
தயார் நிலையில் இருக்க வேண்டும்: ஆனால், இவை எல்லாம் மறக்கக் கூடியவை இல்லை.. ஒரு நாட்டின் ஆயுதப்படை எப்படி 24*7 தயாராக இருக்கிறதோ.. அதேபோல அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நாமும் எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.
ஒரு நாட்டில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதற்காக ஆண்டு முழுக்க போர் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. ஆனால், ஒரு தேசமாக ராணுவம் நமக்கு முக்கியமாகத் தேவை என்பது அனைவருக்கும் தெரியும்.. பெருந்தொற்றையும் இதுபோலத் தான் நாம் பார்க்க வேண்டும். எப்போதும் ஆயுத்தமாக இருக்க வேண்டும்.
அசால்டாக இருக்கக் கூடாது: பெருந்தொற்று காலத்தில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பது தவறான போக்கு.. பெருந்தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று இதில் நாம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அடுத்த முறை பெருந்தொற்று தாக்கும் போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
பெருந்தொற்றை கையாள்வது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒரு சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டு வர வேண்டும். இது தொற்றுநோய் ஏற்படும் போது உலக நாடுகள் தயார்நிலையில் இருப்பதை முன்மொழியும் ஒப்பந்தமாக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த விவகாரத்தில் நாம் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
பேராபத்து: ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்து ஆலோசிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த முறை பெருந்தொற்று ஏற்பட்டாலும் நாம் இதே பிரச்சினையைத் தான் எதிர்கொள்வோம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
-
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications