பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார்.. புதிய மன்னராக பதவியேற்கும் மூத்த மகன் சார்லஸ்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது மூத்த மகன் சார்லஸ் அடுத்த மன்னராக பதவியேற்றார்.

பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் மகாராணி எலிசபெத். 96 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக சில உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு இருந்தார்.

இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டு பூரண ஓய்வெடுத்து வந்தார்.

 பிரிட்டன் மகாராணி எலிசபெத்

பிரிட்டன் மகாராணி எலிசபெத்

கடந்த 1952ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில் தான் அதற்கான கொண்டாட்டங்களும் கூட நடைபெற்றது. நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அவர், அதில் தான் கலந்து கொண்டு இருந்தார். அப்போதும் கூட உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் அவர் சில நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டார்.

 அறிவிப்பு

அறிவிப்பு

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே அவர் மோசமான உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். வயது மூப்பு காரணமாக அவரால் நடக்கவும் நிற்கவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

 அடுத்த அரசர் சார்லஸ்

அடுத்த அரசர் சார்லஸ்

இது பிரிட்டன் மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவரது மூத்த மகன், 73 வயதான சார்லஸ், பிரிட்டன் அடுத்த அரசராகப் பொறுப்பேற்கிறார். சுமார் 70 ஆண்டுகளாக மகாராணி எலிசபெத் தலைமை தாங்கி வந்த நிலையில், இப்போது சார்லஸ் அரசராக மூடி சூட்டப்பட்டு உள்ளார்.

பணிகள்

பணிகள்

இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாகவே இருந்து வந்தது. இதனால் அவர் அரசுப் பணிகளை மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்தே வந்தார், இதன் காரணமாக அவரது மூத்த மகன் புதிய அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+