விமானத்தின் டாய்லட்டில் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய ஜோடி.. பப்பி ஷேம்! கண்ணை மூடிய பயணிகள்
லண்டன்: விமான பயணத்தின் போது டாய்லட்டில் உல்லாசமாக இருந்த ஜோடியை கையும் களவுமாக விமான ஊழியர்கள் பிடித்தனர். விமான பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடைபெற்ற இந்த சமப்வம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விமானத்தில் அவ்வப்போது சில வினோத சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. விமான பயணிகள் சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு சக பயணிகளுக்கு இடையூறு அளிப்பது குறித்த செய்திகளை அடிக்கடி கேள்வி பட்டு இருக்கிறோம். சில சமயங்களில் விமானத்திற்குள் பயணிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு அந்த பஞ்சாயத்து கைது வரைக்கும் கூட சென்றுள்ளது.

இன்னும் சொல்லப்போனால்.. சமீப காலமாக விமானத்தின் எமெர்ஜென்சி டோரை கதவை திறக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று விமான பயணிகள் மத்தியில் அச்சத்தையும் பரபப்பையும் ஏற்படுத்துகிறது. இதெல்லாம் விமானத்தில் சமீப காலமாக அடிக்கடி நடக்கும் சம்பவங்களாக மாறி அடிக்கடி செய்திகளில் அடிபட தொடங்கிவிட்டன.
ஆனால், ஸ்பெயினில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. விமான டாய்லட்டிற்குள் ஒரு ஜோடி உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்கள். இது குறித்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. விமானத்திற்குள் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- இங்கிலாந்தின் லுடன் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயினில் உள்ள்ள இபிசாவிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சுற்றுலா தலமாக விளங்கும் இபிசா தீவு, பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு பெயர் போனது ஆகும். கடந்த 8 ஆம் தேதி இபிசா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் டாய்லட்டிற்கு ஒரு ஜோடி சென்றுள்ளது. ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனை நீண்ட நேரமாக கவனித்த விமான சிப்பந்திகளும் பிறகு டாய்லட்டை திறக்க முடிவு செய்தனர். விமான பயணிகள் அனைவரும் என்ன நடக்கிறது என தங்கள் இருக்கையில் இருந்து கொண்டே திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தனர்.
டாய்லட் கதவை திறந்ததும், உள்ளே இருந்த ஜோடி உல்லாசமாக இருந்ததை கண்டு விமான பயணிகளும் சிப்பந்திகளும் ஒரு நொடி திடுக்கிட்டனர். அதற்குள் உள்ளே இருந்து டாய்லட் கதவையும் உள்ளே இழுத்து பூட்டிக்கொண்டனர். என்னடா இது வம்பா போச்சு.. என விமான சிப்பந்திகள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக, என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். இந்தக் காட்சிகளை விமான பயணிகள் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து அப்படியே இணையத்தில் பரவ விட்டனர்.
இந்த வீடியோ தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே விமானம் தரையிறங்கியதும் டாய்லட்டில் உல்லாசமாக இருந்த ஜோடியை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பாலியல் குற்ற சட்டம் 71-வது பிரிவின் கீழ் இந்த ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இந்த ஜோடி கைது செய்யப்பட்டதா ? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications