கிச்சனில் டொங்குன்னு வந்த சத்தம்.. என்னன்னு பார்த்தா.. ரூ.2.3 கோடி மதிப்புக்கு தங்கம்.. இதுதான் லக்!
லண்டன்: பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பழங்கால தங்க நாணயங்கள் ஏழை தம்பதியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.
அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி வரும் என்பதை எவராலும் கூற முடியாது. பல ஆண்டுகள் வறுமையில் வாழ்ந்தவரின் தலைவிதியை ஒரே நொடியில் மாற்றிவிடும் வல்லமை இயற்கைக்கு இருக்கிறது. இதற்கு பல சாட்சிகளை நாமே கண்டிருப்போம். 60 வயது கூலித் தொழிலாளிக்கு லாட்டரி அடித்து ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபரான செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம்தான் பிரிட்டனில் நடைபெற்றிருக்கிறது.
பிரிட்டனின் நார்த் யார்க்ஸைர் என்ற மாகாணத்தில் அமைந்துள்ளது எல்லர்பை என்ற கிராமம். இந்த கிராமத்தை யாரும் பார்த்தால் அது பிரிட்டனில் இருக்கிறது என முதலில் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு அதன் தோற்றம் இருக்கும். எங்கு பார்த்தாலும் ஓட்டு வீடுகள், சிறிய சிறிய கடைகள் என அந்த கிராமம் காட்சியளிக்கிறது.

ராசியில்லாத வீடு
இந்த கிராமத்தில் உள்ள ஒரு பழைய வீட்டை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாங்கியுள்ளனர். வாங்கும் போதே பலரும் இதை ராசியில்லாத வீடு எனக் கூறியிருக்கின்றனர். இருந்தபோதிலும், விலை குறைவாக இருந்தததால் எதுகுறித்தும் கவலைப்படாமல் அவர்கள் அந்த வீட்டை வாங்கி இருக்கின்றனர். தம்பதியரில் கணவர், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மனைவி வீட்டிலேயே துணிகளை தைத்துக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்.அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை வைத்தே வாழ்க்கையை அவர்கள் ஓட்டி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

வீட்டை புதுப்பிக்க முடிவு
இதனிடையே, வீடு மிகவும் பழமையாக இருந்ததால் அதனை புதுப்பிக்க தம்பதியர் அண்மையில் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான பணம் அவர்களிடம் இல்லை. இதனால் தங்களிடம் இருக்கும் சிறிது பணத்தை வைத்து சமையல் அறையை மட்டும் இப்போதைக்கு புதுப்பிக்கலாம் என அவர்கள் எண்ணினர். அதன்படி, கடந்த வாரம் சமையல் அறையை அவர் புதுப்பித்துள்ளனர். அப்போது சிமெண்ட் தரையை தோண்டி டைல்ஸ் வைக்கும் பணியில் அவர் ஈடுபட்டனர். அப்போது சமையலறையின் ஒரு பகுதியை தோண்டும் போது வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது.

400 ஆண்டுகளாக காத்திருந்த புதையல்
இதையடுத்து அங்கு தோண்டி பார்த்த செம்பு நிறத்தை அவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் அதனை பெரிதாக எண்ணவில்லை. கேபிள் வயர் ஏதும் அடியில் இருக்கும் என நினைத்துக் கொண்டு அவர்கள் மேலும் அதை தோண்டி பார்த்த போது வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில், செம்பு நிறத்திலான ஒரு பாத்திரத்தில் 260 தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அதை வெளியே எடுத்த அவர்கள், இதுகுறித்து லண்டனில் மிகவும் புகழ்பெற்ற ஏலம் விடும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து அந்த நாணயங்களை சோதனை செய்ததில், அது 400 ஆண்டுகளுக்கு முந்தைய அதாவது 1600-களில் புழங்கிய நாணயங்கள் என்பது தெரியவந்தது. அவற்றின் இன்றைய விலை 25 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 2.3 கோடி) ஆகும்.

காலி செய்ய மாட்டோம்
இதையடுத்து, அந்த நாணயங்களை ஏலம் விடும் நடவடிக்கையில் அந்த தம்பதியர் ஈடுபட்டுள்ளனர். எதனை ராசி இல்லாத வீடு என நாங்கள் நினைத்தோமோ, அந்த வீடே எங்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் என நாங்கள் நினைக்கவில்லை. எவ்வளவு பணம் கிடைத்தாலும் இங்கிருந்து செல்ல மாட்டோம் என அந்த தம்பதியர் கூறினர். மேலும், அந்த வீட்டை புதுப்பித்து அங்கு சொந்தமாக தொழில் தொடங்க போகிறோம் என அந்த தம்பதியர் மகிழ்ச்சி ததும்ப கூறினர். பல செய்தி நிறுவனங்கள் கேட்டுக்கொண்ட போதிலும், அந்த தம்பதியர் தங்கள் பெயரை வெளியிட மறுப்புத் தெரிவித்து விட்டனர்.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications