லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் கொரோனா மோசமான பாதிப்பு.. 4 நாடுகள் இவை தான்.. மிரள வைக்கும் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 64,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியா 31,121 பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று மேற்கு நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

Recommended Video

    Tamilnadu vaccinated 21 lakhs people! Milestone in Mega Drive | OneIndia Tamil

    கொரோனா 3வது அலை உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 228,935,812 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 205,520,521 பேர் குணம் அடைந்துவிட்டனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,700,044 பேர் பலியாகி உள்ளனர்.

    தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 18,715,247 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 99,877 பேர் கவலைக்கிடமான நிலையில் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    சபாஷ்..! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உடனடியாக களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடிசபாஷ்..! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. உடனடியாக களத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி

    முதலிடம்

    முதலிடம்

    உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு ஒரே நாளில் 64,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,866,805 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 49060 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,483,226 ஆக உள்ளது. ஒரே நாளில் 849 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 691562 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே உச்சபட்சமாக அமெரிக்காவில் தான் 9,692,017 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

    2வது இடம்

    2வது இடம்

    அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போதும் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகமிக குறைவு ஆகும். இந்தியாவில் ஒரே நாளில் 31121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,447,010 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 39,633 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,664,351 ஆக உள்ளது. ஒரே நாளில் 306 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 444,869ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 337,790ஆக உள்ளது.

    மூன்றாவது இடம்

    மூன்றாவது இடம்

    இந்தியாவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா போலவே ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை இங்கிலாந்திலும் கணிசமாக அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 30,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,400,739 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 24,673 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,958,691 ஆக உள்ளது. ஒரே நாளில் 164 பேர் இங்கிலாந்தில் பலியாகி உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை135,147 ஆக உயர்ந்துள்ளது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,306,901 ஆக உள்ளது.

    4வது இடம்

    4வது இடம்

    இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா போல அல்லாமல் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒட்டியே துருக்கியில் பாதிப்பு உள்ளது. துருக்கியில் ஒரே நாளில் 26,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,820,861 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 24,023 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,309,910 ஆக உள்ளது. ஒரே நாளில் 221 பேர் துருக்கியில் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 61,361 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 449,590 ஆக உள்ளது.

    English summary
    covid cases in world: United States is world's worst affected country The United States is the world's worst affected country by corona. There have been 64,559 cases of corona infection in the last 24 hours. It is followed by India with 31,121 vulnerabilities. Corona infection is spreading rapidly again in western countries.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X