Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கிலாந்து பிரதமர் தேர்வு.. முதல் சுற்று வாக்கெடுப்பில் இந்தியர் ரிஷி வெற்றி.. தீவிரமடையும் போட்டி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தேர்வுக்கான முதல் சுற்று வாக்கெடுப்பில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். 8 எம்பிக்களுக்கு இடையில் நடந்த போட்டியில் இவர்தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துவிட்டார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி க்றிஸ் பிஞ்சர் பார்ட்டி ஒன்றுக்கு சென்று பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது, பிரதமரே லாக்டவுன் விதிகளை மீறி பார்ட்டி செய்தது விலைவாசி உயர்ந்தது, வரி உயர்த்தப்பட்டது சொந்த கட்சி எம்பிக்கள் எதிர்த்தது என்று பல்வேறு காரணங்களால் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை இடைக்கால காபந்து பிரதமராக போரிஸ் ஜான்சனே நீடிக்கிறார்.

இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர்

தற்போது அங்கு கன்சர்வேட்டிவ் கட்சி தங்கள் எம்பிக்களில் ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். இது இந்தியாவில் ஆளும் கட்சி முதல்வர் இறந்தால் எப்படி அந்த கட்சியில் இருந்தே ஒருவர் முதல்வர் ஆவரோ அப்படித்தான். ஆனால் இங்கிலாந்தில் இதற்கு எம்பிக்கள் தங்கள் கட்சிக்கு உள்ளேயே வாக்களிப்பார்கள். தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 8 எம்பிக்களுக்கு இடையில் பிரதமர் பதவிக்கு போட்டி உள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி

கன்சர்வேட்டிவ் கட்சி

லிஸ் ட்ரஸ், நாதிம் ஜஹாவி, ரிஷி சுனக், ஜெர்மி ஹன்ட், கெமி படேனோச், சுயெல்லா பிரேவர்மேன், பென்னி மோர்டான்ட் மற்றும் டாம் துகெந்தட். ஆகிய 8 பேருக்கு இடையில் போட்டி உள்ளது. இதில் முதல் சுற்றில் எம்பிக்கள் வாக்கு அளித்து தங்களுக்கு விருப்பமான நபரை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு கடைசியில் போட்டி 2 பேருக்கு இடையில் வரும்.

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

மொத்தம் கன்சர்வேட்டிவ் கட்சியில் 358 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் நேற்று வாக்களித்தனர். இதில் எம்பிக்கள் குறைந்தது 30 வாக்குகளையாவது பெற வேண்டும். 8 பேரில் 2 பேரை தேர்வு செய்யும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடக்கும். இதில் முதல் கட்ட வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்றார். சுனக் அதிகமாக 88 வாக்குகளை பெற்றார். பென்னி 67 வாக்குகளை பெற்றா ர்.

எப்படி?

எப்படி?

நதீம் சவாரி, ஜெரிமி ஆகியோர் 30 வாக்குகளை கூட பெறாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். இதில் சுயெல்லா பிரேவர்மென் என்ற இன்னொரு இந்திய வம்சாவளி எம்பியும் போட்டியில் உள்ளார். இதன் மூலம் 8 எம்பிக்களுக்கு இடையிலான போட்டி 6 எம்பிக்களாக குறைந்துள்ளது. இந்த தேர்தல் வாக்குப்பெட்டியில் வாக்கு செலுத்தி நடத்தப்படும் மறைமுக தேர்தல் ஆகும். இதற்கு பின் கடைசியில் 2 வேட்பாளர்களுக்கு இடையில் கட்சி பொதுக்குழு தேர்தல் நடக்கும்.

 பொதுக்குழு

பொதுக்குழு

அதாவது கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட 160,000 - 200,000 உறுப்பினர்களுக்கு இடையில் கடைசி இரண்டு வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். அவர்கள் வாக்களித்து பிரதமருக்கு தகுதியான ஒரு எம்பியை தேர்வு செய்வார்கள். இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் நடந்து செப்டம்பர் 5ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டு அதே நாளில் புதிய பிரதமர் பதவி ஏற்பார். இப்போது வரை ரிஷி சுனக் போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்.

தேர்தல்

தேர்தல்

பொதுவாக இப்படி தேர்வாகும் பிரதமர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்து, மக்கள் வாக்களித்து பிரதமர் ஆவதை உறுதி செய்வது வழக்கம். முன்னதாக போரிஸ் ஜான்சன் எம்பிக்கள் ஆதரவு மூலம் பிரதமர் ஆன பின் தேர்தலை சந்தித்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரதமர் பதவியை உறுதி செய்தார். ஆனால் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரிஷி சுனக் பிரதமராகும் பட்சத்தில் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+