லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முதல் உறவு".. புல்தரையில் அந்தம்மாகிட்ட.. "பிளான் B"யாக வளர்ந்தேன்.. பிரின்ஸ் ஹாரியின் அடுத்த வெடி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையில் எழுதப்பட்டுள்ள நிகழ்வுகள் பரபரப்பை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

லண்டன்: ராஜ பரம்பரையே என்றாலும், நாட்டை ஆளும் மன்னர் குடும்பமே என்றாலும், அடிதடி பஞ்சாயத்தெல்லாம் இருக்கம் போல.. அப்படித்தான் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸ் - டயானா தம்பதிக்கு பிறந்த 2வது மகன் இளவரசர் ஹாரி... இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடிகையான மேகன் மார்கெலை காதலித்து வந்தார்.

கடந்த 2018ல் 2 பேருமே திருமணம் செய்து கொண்டனர்.. ஆனால், அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. அதாவது, நிறம் சார்ந்தும் பல்வேறு விமர்சனங்களை மேகன் எதிர்கொண்டார்.

கசப்புகள்

கசப்புகள்

கடைசியில் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். இதற்கு பிறகு, தங்களது காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்து ஹாரி - மேகன் தம்பதி அளித்த பல்வேறு பேட்டிகள், இங்கிலாந்து அரச குடும்பத்தில் பல்வேறு சர்சசைகளை தொடர்ந்து ஏற்படுத்தியது. மேகன் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என்றெல்லாம் அரச குடும்பத்தினர் ரொம்பவே கவலைப்பட்டார்கள்.. பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசியதாக, அந்த தம்பதியினர் ஓபனாக சொல்லியிருந்தது, பேசுபொருளாக உருவெடுத்தது.

கசப்பு

கசப்பு

இப்படிப்பட்ட சூழலில், இளவரசர் ஹாரி ஸ்பேர் (spare) என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்... அந்த புத்தகம் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒருசில விஷயங்கள் முன்கூட்டியே கசிந்துவிட்டன.. குறிப்பாக வில்லியம் தன்னை தாக்கிவிட்டதாக, ஹாரி அதில் பதிவிட்டிருந்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. "கடந்த 2019ம் ஆண்டு மேகன் மார்கெல் பற்றி, லண்டன் வீட்டில் எனக்கும், என் சகோதரர் வில்லியமுக்கும் தகராறு வந்துவிட்டது.. அப்போது வில்லியம், மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர்.

 கண்ணாடி கிண்ணம்

கண்ணாடி கிண்ணம்

ஒரு கட்டத்தில் வில்லியம், என்னுடைய சட்டை காலரை பிடித்து இழுத்தார்... என்னுடைய கழுத்தில் கிடந்த சங்கிலியை பிய்த்து எறிந்தார்.. என்னையும் கீழே தரையில் தள்ளிவிட்டார். நான் தடுமாறி நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்துவிட்டேன்.. அந்த கிண்ணம் உடைந்து, என்னுடைய முதுகில் காயத்தை ஏற்படுத்திவிட்டது.. நான் ஒரு நிமிஷம் அப்படியே படுத்துவிட்டு, அதற்கு பிறகுதான், கொஞ்சம் தெளிந்து, மெதுவாக எழுந்து வந்தேன்.. கீழே விழுந்துவிட்டதால், என்னுடைய முதுகில் காயம் ஏற்பட்டது.. இவை எல்லாம் மிக வேக வேகமாக நடந்து முடிந்துவிட்டன என்றெல்லாம் புத்தகத்தில் ஹாரி எழுதியுள்ளாராம்.

கன்னித்தன்மை

கன்னித்தன்மை

அதுமட்டுமல்ல, கொகைன் போதை பொருளை பலமுறை எடுத்துக் கொண்டது உட்பட 17 வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்துலிவட்டதாக ஹாரி அதில் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்.. அதில், "அன்றைய தினம் எனக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.. நான் அப்போது விஸ்கி குடித்திருந்தேன்.. பிறகு ஒரு பப்புக்கு போயிருந்தேன்.. ஆனால் அங்கே குடிக்கவில்லை... அங்கு ஒரு பெண் என்னையே உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். அவரை நான் அழைத்துக் கொண்டு வெளியே சென்றேன்... பப்புக்கு பின்னாடியே ஒரு புல்வெளி இருக்கிறது. அந்த புல்வெளியில் நாங்கள் உடலுறவில் ஈடுபட்டோம்" என்று ஓபனாகவே கூறியிருந்தார்.

 உறுப்பு தானம்

உறுப்பு தானம்

இந்த தகவல்கள் எல்லாம் புத்தகம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன்பேயே வெளியில் கசிந்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த சுயசரிதை புத்தக வெளியீடும் நடந்து முடிந்தது.. இப்போது சுயசரிதையில் உள்ள மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஹாரி தன்னுடைய புத்தகத்தில், "அரச குடும்பத்தின் வாரிசு இளவரசர் வில்லியம்ஸ், என்னைவிட இரண்டு வயது மூத்தவர். அவருக்கு அசம்பாவிதம் ஏதாவது ஏற்பட்டால், உடல் உறுப்பு தானம் வழங்கவே நான் வளர்க்கப்பட்டேன். நான் ஒரு நிழலாகவே இருந்தேன்.

 PLAN B

PLAN B

பிளான் Bயாக நான் வளர்க்கப்பட்டேன். என்னுடைய அப்பா அரசர் சார்லஸ், என் அம்மா டயானாவிடம் பேசும்போது, இந்த விஷயத்தை நான் கேட்டேன். அப்போது எனக்கு 20 வயது" என்று அதில் எழுதியிருக்கிறாராம்.. மேலும், அரச வாழ்க்கையிலிருந்து விலகியது ஏன்? எதற்காக அமெரிக்கா சென்றார்? என்பன போன்ற கேள்விகளுக்கும் அந்த சுயசரிதையில் பதில் உள்ளதாக கூறுகிறார்கள். ஹாரியின் சுயசரிதை ஒரே நாளில் 1.4 மில்லியன் புத்தகங்கள் இங்கிலாந்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது...

 அதிரும் அரண்மனை

அதிரும் அரண்மனை

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் மட்டும் 1.4 மில்லியன் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளதாம்.. மேகனை கல்யாணம் செய்யும் விவகாரத்தில் வில்லியம்ஸ், தன்னுடைய கழுத்தை பிடித்து தாக்கி தரையில் தள்ளியதாக இளவரசர் ஹாரி புத்தகத்தில் எழுதி ஏற்கனவே அது பூகம்பமாக வெடித்து வரும்நிலையில், தனது அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக ஹாரி சொல்லியுள்ளது, மீண்டும் ரண்மனையை அதிர வைத்திருக்கிறதாம்..!!!

English summary
First girl friend and Prince Harrys memoir spare sold on 1st day 1.4 million copies in UK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X