சரமாரி கத்திக் குத்து.. 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்.. நடுங்கிப்போன ஸ்காட்லாந்து.. தீவிரவாதி கைவரிசை?
லண்டன்: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ்காரர் உட்பபட 6 பேர் காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 6 பேரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை என்றும், ஸ்காட்லாந்து காவல்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கிளாஸ்கோ நகரின் பார்க் இன் என்ற ஹோட்டல் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அடைக்கலம்
பார்க் இன் ஹோட்டல் தற்போது பிற நாடுகளிலிருந்து ஸ்காட்லாந்துக்கு அடைக்கலம் தேடி வருவோருக்கு தங்குமிடம் வசதி அளிக்க கூடிய பகுதியாக இருக்கிறது. இதன் வரவேற்பறை பகுதியில்தான் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கத்திக் குத்து
சம்பவ இடத்தில் இருந்த ஜான் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வரவேற்பறை பகுதியில், ரத்த துளிகள் சிந்தி கிடந்தன. அங்கு ஒருவர் கத்திக்குத்துப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நான் ஓடிச்சென்று அமைதியாக இருக்கவும், பதட்டப்பட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். இதேபோன்று கத்திக்குத்துக்கு உள்ளாகிய இன்னொருவரையும் நான் பார்க்க நேரிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாட்டினர்
கிரேக் மில்ராய் என்பவர் கூறுகையில், நான் இந்த ஹோட்டல் அருகே உள்ள அலுவலகத்தில் இருந்தேன். நான்கு பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தரையில் விழுந்து கிடந்ததை பார்க்க நேரிட்டது. அவர் கத்திக் குத்தாலா, அல்லது துப்பாக்கி சூட்டால் விழுந்துகிடந்தாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தினர்
கத்திக் குத்து நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணி என்ன? தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி விசாரணை தொடங்கியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications