லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏமாற்ற முடியாது..இனி "அந்த” படங்கள் பார்க்க கிரெடிட்கார்டு, பாஸ்போர்ட் முக்கியம்..திடீர் கடிவாளம்..!

Google Oneindia Tamil News

லண்டன் : பிரிட்டனில் போர்ன் மூவிஸ் எனப்படும் ஆபாச படங்களை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் பார்க்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில், கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிப்பது அவசியம் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக அளவில் இணையதளங்களில் உலா வரும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது இதற்காகவே ஏராளமான இணையதள நிறுவனங்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆபாச படங்களை இணையதளங்களில் பார்க்க இந்தியாவில் தடை இல்லை.

உலகளவில் பல நாடுகளுக்கு ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு இந்தியாவில் ஆபாச இணையதளங்கள், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு காரணமாக இருப்பதால் ஆபாச படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆபாச படங்களுக்கு தடை

ஆபாச படங்களுக்கு தடை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட்டனர். நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வலைதளங்களை முடக்கும் பணியில் மத்திய மின்னியல் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் தொலைதொடர்பு துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து படிப்படியாக ஆபாச இணையதளங்கள் முடக்கம் நிலையில் தற்போது விபிஎன் எனப்படும் விர்ச்சுவல் போர்ட்டபிள் நெட்வொர்க் மூலம் ஆபாச படங்கள் பார்க்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

இன்காக்னிட்டோ டேப்

இன்காக்னிட்டோ டேப்

இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்கள் வேறு டொமைன் நேம்களில் மீண்டும் நுழைந்துள்ளன. இன்காக்னிட்டோ டேப் மற்றும் விபிஎன் பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஆபாச படங்கள் சாதாரணம் என்றாலும், அங்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆபாச இணைய தளங்கள் மற்றும் படங்கள் பார்க்க அங்கு தடையில்லை. ஆனால் பிரச்சினை அதுவல்ல.

ஆபாச தளங்களுக்கு கடிவாளம்

ஆபாச தளங்களுக்கு கடிவாளம்

தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் மூழ்கி கிடக்கின்றனர். அப்போது ஆபாச இணையதளங்களின் குறுக்கீடுகளால் கல்வி பாதிக்கப்படுவதோடு, தவறான பாதைக்கும் செல்ல வாய்ப்புண்டு, மேலும் பெற்றோரின் பெயரில் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி இருக்கும் என்பதால் சிறுவர்கள் இதனை பயன்படுத்தி ஆபாச இணையங்களுக்கு உலாவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு கடிவாளம் போடும் வகையில் புதிய ஆன்லைன் செக்யூரிட்டி பில் எனப்படும் மசோதா பிரிட்டனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு அவசியம்

கிரெடிட் கார்டு அவசியம்

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இணையதளத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மசோதாவின்படி ஆபாச இணையதளங்களை உபயோகிக்கும் நபர்கள் 18 வயதைக் கடந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் பயனாளர்கள் கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆதாரமாக அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் வழங்கும் தகவல்களை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆபாச இணையதளங்களுக்கு பிரிட்டன் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருவர் ஆபாச இணையதளங்களை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The government has issued a directive requiring the submission of documents, including credit cards and passports, to ensure that pornography, also known as porn movies, is viewed by people over the age of 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X