"அதீத நெருக்கம்.." அலறிய ஹோட்டல்.. பொது இடத்தில் எல்லை மீறிய தம்பதி.. ஜோடி செஞ்ச காரியம் இருக்கே
ஒரு ஜோடியின் அதீத நெருக்கம் ஹோட்டலையே அலற வைத்துள்ளது.
லண்டன்: பிரிட்டனில் இப்படி வித்தியாசமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடியதே பெரிய பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்ற படியேறியது மட்டுமின்றி பெரும் தொகையையும் அபராதமாகச் செலுத்தியுள்ளனர்.
காதலர் தினத்தை பொதுவாக ஒவ்வொரு நபரும் தங்கள் பார்ட்னருடன் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவார்கள். இந்தியாவில் பெரியளவில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இருக்காது.
இருப்பினும், வெளிநாடுகளில் காதலர் தின கொண்டாட்டங்கள் முக்கியமாகவே இருக்கும். பாட்னருக்கு சர்ப்ரைஸ் கிப்ட், இன்ப சுற்றுலா என்று அனைவரும் ஒவ்வொரு வகையில் காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள்.

பிரிட்டன்
அப்படித்தான் பிரிட்டன் நாட்டில் காதலர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட ஒரு தம்பதி முடிவு செய்துள்ளனர். ஆனால், இப்படி வித்தியாசமாகக் கொண்டாடியதே பெரிய பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்ற படியேறியது மட்டுமின்றி பெரும் தொகையையும் அபராதமாகச் செலுத்தியுள்ளனர். பிரிட்டன் நாட்டில் உள்ள ஆஷ்போர்னில் உள்ள மூர்லாண்ட்ஸ் இசாக் வால்டனுக்கு பிரிட்டன் நாட்டின் ஜேமி போல்ட்பீ மற்றும் கெய்லி ஹர்ஸ்ட்ஹவுஸ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு தான் அவர்களுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது.

அதிக சத்தம்
அவர்களின் எல்லை கடந்த நெருக்கம் மற்ற விருந்தினர்களுக்குத் தொந்தரவாக அமைந்ததாக போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. மேலும், அந்த தம்பதி அவர்கள் தங்கியிருந்த ரூமையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து அங்குச் சென்ற போலீசார், அந்த தம்பதி தங்கியிருந்த ரூமிற்கு சென்றுள்ளனர். பல முறை கதவைத் தட்டியும் போலீசாருக்கே அந்த தம்பதி கதவைத் திறக்கவில்லை. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்த மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

போலீசார்
அவர்களைக் கைது செய்த போலீசார், இது குறித்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் கரேன் ரைட் கூறுகையில்,"போலீசார் உள்ளே சென்ற போது.. அந்த பெண் ஹர்ஸ்ட்ஹவுஸ் அதிக போதையில் இருந்தார். மதுவின் நாற்றம் அவர் மீதிருந்து வீசியது. தள்ளாடிக் கொண்டிருந்த அவர் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தார். அந்த ஆண் போல்ட்பீ படுக்கையில் கிடந்தார்.

மன அழுத்தம்
அறையில் இருந்து பயங்கர சத்தம் வர இருவரும் உடலுறவு கொண்டதே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் உடலிலும் சில காயங்கள் இருந்தது. இவர்களின் குழந்தை சமீபத்தில் தான் உயிரிழந்தது" என்றார். அதேபோல அந்த தம்பதி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், "குழந்தை இறந்ததில் அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இதன் காரணமாக அவரது மனதை மாற்றவே இதுபோன்ற ரொமேன்டிக் இரவுக்கு அந்த பெண் ஏற்பாடு செய்துள்ளார். அப்போது குடிபோதையில் இப்படிச் செய்துள்ளனர்.

அதீத நெருக்கம் ஆபத்து
மேலாளர் அங்கே வந்த போது இருவரும் அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர். சேதம் ஏற்படுத்தியதற்கும் பணம் தருவதாக ஒப்புக் கொண்டனர். இதையும் தாண்டி ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசாரை அழைத்துள்ளனர்" என்றார். மேலும், இப்போதும் ஹோட்டலில் ஏற்பட்ட சேதத்திற்குப் பணம் தர தாயாராகவே இருப்பதாகத் தெரிவித்தனர். ரொமான்டிக் இரவாக பிளான் செய்யப்பட்ட அந்த நாள் இருவரின் அதீத நெருக்கம் காரணமாக மற்றவர்களுக்குப் பெரிய தொல்லையாக மாறியுள்ளது.

அபராதம்
இது குறித்து நீதிமன்றத்தில் முழு விசாரணை நடைபெற்றது. முடிவில் இருவரும் செய்தது குற்றம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாயை நீதிபதிகள் அபராதமாக விதித்தனர். அதில் ஒரு பகுதி அன்று ஹோட்டலில் தங்கியிருந்தவர்களுக்கு நஷ்டஈடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications