வாடகை வீட்டுக்கு வரிசையில் நிற்கும் இங்கிலாந்து மக்கள்.. திணறும் பொருளாதாரம்! ஷாக் ரிப்போர்ட்
லண்டன்: இங்கிலாந்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் வாடகை வீடு தேடுபவரின் எண்ணிக்கை 6ஆக இருந்த நிலையில் இன்று இது 30ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தின் பொருளாதாரம் தலைகீழாக மாறி வருகிறது. அடிப்படை பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் மீண்டும் அக்கடனை அடைக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் காரணமாக தாங்கள் வாங்கிய வீடுகளை விற்கும் இடத்திற்கு வந்திருக்கின்றனர்.

எனவே சொந்த வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீடுகளுக்கு குடிபெயர தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள ஆய்வு நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை 6ஆக இருந்தது. ஆனால், தற்போது இது 30ஆக உயர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளது. மட்டுமல்லாது வாடகை வீட்டை பார்க்க வரிசையில் நின்று வருகிறார்கள் என்று கூறியுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக வடமேற்கு பகுதியில் வாடகை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில், சிங்கிள் பெட்ரூம் உள்ள வீடு ரூ.2.30 லட்சத்திற்கு வாடகை விடப்படுகிறது. இது ரொம்ப அநியாயம். கடந்த சில நாட்களுடன் இதை ஒப்பிடும்போது இது ரூ.30 ஆயிரம் அதிகம். எங்கள் சம்பளத்தில் பாதி இந்த வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது" என்று கூறியுள்ளனர்.
பிரிட்டனில் 7 பேரில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 2 வேளை உணவுதான் கிடைக்கிறது. 40 சதவிகித மக்கள் உணவுக்காக செலவழிக்கும் தொகையை கன்ட்ரோல் செய்துக்கொண்டுள்ளனர். அதேபோல 50 சதகிவிதம் பேர் மின் கட்டணத்தை குறைக்க வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்திருக்கிறது. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் பணக்காரர்கள் அதிக சொத்தை சுரண்டி சேர்த்து வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஆட்சியில் இருந்த அனைவரும் உதவியுள்ளனர். அதேபோல மறுபுறம் தொழிலாளர்களின் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பான வேலை போன்றவற்றில் பிரிட்டன் அரசு கை வைத்திருக்கிறது. இதனால் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே ஒவ்வொரு பிரதமராக ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க நாட்டின் கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு வரி மூலம் கிடைக்கும் வருவாய் சாமானிய மக்களின் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எப்படி இருப்பினும் ரிஷி சுனக் தலைமையிலான அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது. எனவே தற்போதைய நெருக்கடி மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏற்கெனவே இந்தியாவை விட பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications