இது முற்றிலும் தவறு.. விவசாய போராட்டம் குறித்து விவாதித்த பிரிட்டிஷ் பாராளுமன்றம்..இந்திய கண்டனம்!
லண்டன்: வடமாநிங்களில் நடந்து வரும் விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதற்கு இந்திய உயர் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறது.
100 நாட்களை கடந்து செல்லும் இந்தபோராட்டம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்து உள்ளது. இந்தியாவை உலுக்கி வரும் இந்த விவசாய போராட்டம் குறித்து நேற்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

மனுக்கள்
இந்த விவசாய போராட்டம் குறித்து லண்டனை சேர்ந்த லிபரல் டெமாக்ரட் கட்சியை சேர்ந்த குர்ச் சிங் என்பவர் இணையத்தில் கொடுத்த மனு காரணமாக இந்த விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையான ஹவுஸ் ஆப் காமன்சில் இந்த விவாதம் நடந்தது. விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெட்டிஷன் கமிட்டி உறுப்பினர்கள், சில எம்பிக்கள் மற்றும் சில அமைச்சர்கள் பேசினார்கள்.

சர்ச்சை
இந்த விவாதத்தில் இந்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று விவாதம் செய்யப்பட்டது.

ஆதரவு
பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கமான சில ஆளும் கட்சி எம்ஏக்கள் மட்டும் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசிய நிலையில் மற்ற எம்பிக்கள் எல்லோரும் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக பேசி இருந்தனர். சில ஆளும் கட்சி எம்பிக்கள் இது விவாதத்தில்.. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.விவசாய சட்டம் மற்றும் போராட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து கூறி வந்த நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இதை பற்றி விவாதித்து உள்ளனர்.

கண்டனம்
இந்த நிலையில் விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதற்கு இந்திய உயர் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒருதலைப்பட்சமானது. இந்த விவாதத்தில் உண்மைக்கு பபுறம்பான விஷயங்கள், பொய்யான விஷ்யங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது.

இங்கிலாந்து
பிரிட்டிஷ் பத்திரிகைகள் கூட இந்தியாவில் விவசாய போராட்டம் குறித்த செய்திகளை சேகரித்தது. போராட்டத்தில் அரசு எந்த அடக்குமுறையும் செய்யவில்லை. ஆனால் இது தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தவறாக விவாதிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடாக இருந்தாலும் இது போன்ற விவாதங்கள் முறையானது கிடையாது. இது உள்நாட்டு விவகாரம்.

பதில்
பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டிற்கு இந்தியா பதில் அளிக்காது. ஆனாலும் இந்தியா மீது தவறான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை இந்திய கமிஷன் வெளியிடுகிறது. இந்த விவாதம் சமமாக இல்லாததை நினைத்து வருந்துகிறோம், என்று இந்திய உயர் கமிஷனின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications