கே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு
Recommended Video

லண்டன்: இங்கிலாந்தில் மனைவியைக் கொன்றதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் மிடில்ஸ்பர்கில் வசித்து வந்தவர் ஜெசிகா படேல். கடந்த மே மாதம் அவர் தமது இல்லத்தில் இருக்கும் போது மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடல் முழுக்க காயங்கள் இருந்ததால் விசாரணையை அந்நாட்டு போலீசார் துரிதப்படுத்தினர்.
விசாரணையின் போது, போலீசாரின் சந்தேக வளையம் கணவர் மிதேஷ் படேல் மீது விழுந்தது. ஆனால், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுக்க விசாரணையை வேறு கோணத்தில் போலீசார் கொண்டு சென்றனர்.

சிக்கிய ஆதாரங்கள்
துரிதமான விசாரணையில், வகையாக மாட்டிக் கொண்டார் மிதேஷ். நீதிமன்றத்தில் அவர் எப்படி கொலை செய்தார் என்பது விவரிக்கப்பட... க்ரைம் கதைகளை மிஞ்சும் அளவுக்கு இருந்தது மிதேஷின் ப்ளான்.

காட்டிக் கொடுத்த சாட்டிங்
தமக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு ஆண் நண்பருடன் இயற்கைக்கு மாறான உறவு இருந்ததை அவர் விவரித்துள்ளார். ஆண் நண்பரான அந்த மருத்துவருக்கு மிதேஷ் அனுப்பிய சாட்டிங்குகள் அவருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக இருந்தன.

கொல்ல வேண்டும்
மனைவிக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது கதையை முடிப்பேன் என்று அவர் நண்பருக்கு அனுப்பிய செய்தி முக்கிய ஆதாரமாக போலீசார் சமர்ப்பித்துள்ளனர். அது தவிர, இணையத்தில் மனைவியை கொல்வது எப்படி, மனைவியை தாம் கொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்று தேடியதும் மிதேஷ்க்கு பாதகமாக முடிந்தது.

வலுவான ஆதாரங்கள்
ஆனால், நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மறுப்பது போல அவரும் மறுத்துள்ளார். இல்லம் திரும்பிய போது, மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தமது மனைவியின் கைகளை கட்டிச் சென்றதாக மிதேஷ் தெரிவிக்க, அதை முறியடிக்கும் விதமாக அரசு தரப்பில் வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன.

இன்சூரன்ஸுக்கும் குறி
ஆண் நண்பருடன் வாழவும், மனைவியின் காப்பிடு பணத்தை பெறவும் மிதேஷ் செயல்பட்டுள்ளார். அதற்காக. இன்சுலின் மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர் ஜெசிகாவின் முகத்தை பாலிதின் பையால் போர்த்தி கொன்றுள்ளார். விசாரணையில் அனைத்து ப்ளான்களும் வெட்ட வெளிச்சமாகி விட, வகையாக மாட்டிக் கொண்டார். குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் தண்டனையை தர தயாராகி வருகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications