ராணி எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர்.. வெறும் 45 நாட்கள் தான்.. லிஸ் டிரஸ் ராஜினாமா! நடந்தது என்ன
லண்டன்: பிரிட்டன் பிரதமர் பதவியை ஏற்ற சில வாரங்களிலேயே லிஸ் டிரஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டனுக்கு இப்போது பொல்லாத காலம் போல.. அங்கு வரிசையாகக் கடந்த சில மாதங்களாகவே பல மோசமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.
பிரிட்டனில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி எலிசபெத் கடந்த மாதம் உயிரிழந்தார். இப்போது அந்நாட்டின் பொருளாதாரமும் தடுமாறி வருகிறது.

என்ன நடந்தது
2019இல் பிரிட்டன் பிரதமராகத் தேர்வானவர் போரிஸ் ஜான்சன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிலையில், அதையும் கூட இவர் காட்டினார். இருப்பினும், அதன் பின்னர் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளில் சிக்கினார். நாடே கொரோனா ஊரடங்கில் திணறி கொண்டு இருந்த போது மது விருந்து நடத்தினார். இப்படிப் பல சர்ச்சைகளில் சிக்கியதால் அவர் சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.

லிஸ் டிரஸ்
அதன், பின்னர் புதிய பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. பிரிட்டன் சட்டப்படி ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார். அப்போது அங்கு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், லிஸ் டிரஸ் பிரதமர் ஆனார்.

அமைச்சர்கள் ராஜினாமா
அவர் கடந்த மாதம் பிரதமர் பதவியை ஏற்றார். பிரதமராக வந்ததும் அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், அது பிரிட்டன் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. இதனால் லிஸ் டிரஸுக்கு அழுத்தம் அதிகரித்தது. அவரது அமைச்சரவையில் இருந்து இரு அமைச்சர்கள் வெளியேறினர்.

லிஸ் டிரஸ் ராஜினாமா
கட்சிக்கு உள்ளேயே அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக எல்லாம் பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்கள் மட்டுமே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.

காரணம்
தான் ஒரு போராளி பிரச்சினையைக் கண்டு அஞ்சி ஓடுபவர் இல்லை என்று சொன்ன 24 மணி நேரத்திற்குள் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தன்னை எதற்காகப் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தார்களோ அதை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பதால் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், அடுத்த பிரமரைத் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ராணி எலிசபெத்
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நியமனம் செய்த கடைசி பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். அந்நாட்டு வழக்கப்படி பிரிட்டன் ராணி தான் பிரதமரை நியமிப்பார்கள். கடந்த செப். 6இல் பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸை பிரிட்டன் ராணி எலிசபெத் நியமித்தார். ஸ்காட்லாந்த் அரண்மனையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ராணி எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர் வெறும் 45 நாட்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications