யார்ரா அந்த பையன்? 900 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி.. வலை வீசி தேடும் லாட்டரி நிறுவனம்
லண்டன்: பிரிட்டனின் யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி பரிசு வென்றவரை லாட்டரி நிறுவனம் தேடி வருகிறது. அதிர்ஷ்ட எண் கொண்ட லாட்டரி உங்களிடம் இருக்கிறதா என்று மறுபடியும் ஒருமுறை செக் பண்ணுங்க என லாட்டரியை வாங்கியவர்களை லாட்டரி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று சொல்வார்களே அப்படி நமக்கும் ஒருநாள் கடவுள் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுத்து விடுவார்.. தலைவிதியே ஒரே நாளில் மாறிவிடாதா என பகல் கனவு பலரும் கண்டு இருப்பார்கள். அதிலும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி இருக்கும் இடங்களில், இப்படி பகல் கனவு காணாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.

மேலும் வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்து விடாதா, என லாட்டரி குலுக்கல் நாளையும், பரிசுத்தொகை விழுந்த எண்ணையும் செக் செய்து கொண்டு இருப்பார்கள். உண்மையில் பல லட்சம் பேருக்கு ஒருவருக்கு மட்டுமே லாட்டரியில் பரிசுத்தொகை கிடைக்கும் என்பதால், இதில் நஷ்டம் அடைந்தவர்களே அதிகம். ஆனாலும் லாட்டரிகளை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் விரும்பி வாங்குவதை பார்க்க முடியும். உலகின் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி இருக்கிறது.
இதில் டிக்கெட்டுகளை வாங்கி பரிசுத்தொகை வென்றவர்களின் சுவாரசிய கதைகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவும்.. குறிப்பாக பிரிட்டனில் உள்ள யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் பல ஆயிரம் கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதனால், இந்த யூரோ மில்லியன்ஸ் லாட்டரியில் பரிசு வென்றவர்களை பற்றிய சுவாரசிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துவிடும். தற்போதும் அப்படியான ஒரு தகவல்தான் உலா வந்து கொண்டு இருக்கிறது.
யூரோமில்லியன்ஸ் லாட்டரியில் £83,474,081.80 பரிசுத்தொகை ஒரே நபருக்கு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 899 கோடிக்கும் மேல் ஆகும். லாட்டரியின் அதிர்ஷ்ட எண்ணை சரியாக பொருத்தி முழு தொகையும் ஒரே நபருக்கு பரிசுத்தொகை கிடைக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே அதிர்ஷ்ட எண் அறிவிக்கப்பட்ட போதும் கூட இதுவரை வெற்றியாளர் கிடைக்கவில்லை. இதனால் லாட்டரி விளையாடியவர்கள் மீண்டும் ஒரு முறை தங்களிடம் உள்ள டிக்கெட் எண்ணை செக் செய்யுமாறு லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. 899 கோடி ரூபாய் வென்றது யார் என பிரிட்டனில் லாட்டரி விளையாடியவர்கள்.. யார்ரா அந்த பையன் என்ற ரேஞ்சுக்கு தேடி வருகிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications