கணவர் ராஜினாமா செய்யும்போது.. அக்ஷதா மூர்த்தி அணிந்த காஸ்ட்லி ஆடை! அம்மாடி விலை எவ்வளவு தெரியுமா
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், ரிஷி சுனக் தனது பிரமதர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் தனது அலுவலகம் முன்பு பிரதமராக கடைசி உரையை ஆற்றும் போது, அப்போது அவருக்கு பின்னால் மனைவி அக்ஷதா நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே இப்போது அக்ஷதா அணிந்திருந்த உடை தான் விவாத்தை கிளப்பியுள்ளது.
பிரிட்டன் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ரிஷி சுனக் பிரதமராக கடைசி உரையை ஆற்றினார். அப்போது அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பார்த்துக் கொண்டிருந்தார்.

படுதோல்வி: நவீன பிரிட்டன் வரலாற்றில் மிக மோசமான தோல்வி கன்சர்வேடிவ் கட்சிக்கு இந்த முறை கிடைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் பிரிட்டனில் மிக பெரிய விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் அக்ஷதா மூர்த்தி தனது கணவரின் கடைசி உரையின் போது அணிந்திருந்த ஆடையும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கணவர் ராஜினாமா செய்யும் போது இவ்வளவு விலை உயர்ந்த ஆடை அணியலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிஷி சுனக் உரையாற்றும் போது நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் அக்ஷதா மூர்த்தி ஆடையை அணிந்திருந்தார். அதை சுற்றியே விவாதம் கிளம்பியுள்ளது. ஒரு சிலர் கடைசி உரைக்கு இது பொருத்தமான ஆடை இல்லை என்றும் அக்ஷதா எளிமையான ஆடையை அணிந்திருக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஆடையின் விலை குறித்தும் கருத்து கூறி வருகின்றனர்.
என்ன உடை: இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இங்கே, அக்ஷதா மூர்த்தி உடையை பாருங்கள்.. ஸ்டீரியோகிராம் போன்ற உடையை அணிந்துள்ளார். குழப்பமான இந்த ஆடையை பார்த்தால் கேளிக்கை பூங்கா ஃபாஸ்ட் டேக் QR கோட் போல தான் இருக்கிறது" என்று மற்றொரு நபர் கூறி வருகின்றனர்.
விலை: அதேநேரம் இன்னும் சிலர் அந்த ஆடையின் விலை குறித்தும் கருத்து கூறி வருகிறார்கள். அந்த ஆடை சுமார் 400 பவுன்டு அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,000ஆக உள்ளது. கணவர் பிரதமராக கடைசி உரையை ஆற்றும் போது அவர் எளிமையான உடையை அணிந்திருக்கலாம் என இன்னும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். மேலும், அக்ஷதா கையில் குடை ஒன்றை வைத்திருந்த நிலையில், அதுவும் கூட தேவையற்ற கவனத்தை ஈர்க்காத ஒன்றாக இருப்பதாக இன்னும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை பிரிட்டனுக்கு பிரதமராக இருந்தவர்களில் பணக்காரர் என்றால் அது ரிஷி சுனக் தான்.. இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். இவர்களின் சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இதுவரை பிரிட்டனில் பிரதமராக இருந்தவர்களில் மிகவும் செல்வந்தர்கள் என்றால் அது ரிஷி சுனக் குடும்பத்தினர் தான் குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அங்கு மொத்தம் 650 சீட்கள் உள்ள நிலையில், தொழிலாளர் கட்சி 411 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை அமைத்துள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியால் 121 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக வேல்ஸ், வடக்கு அயர்லாந்தில் ஒரு இடத்திலும் கன்சர்வேடிவ் கட்சியால் வெல்ல முடியவில்லை..












Click it and Unblock the Notifications