பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி.. மோசடி மன்னன் நிரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுகிறார்!
லண்டன்: நிரவ் மோடியின் மனுவை பிரிட்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைர வியாபாரியான நீரவ் மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றார்.

பின்னர் சி.பி.ஐ. தலையீட்டின்பேரில் அங்கு கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர சி.பி.ஐ. தொடர்ந்து முயன்று வருகிறது.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த நீதிமன்றம் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. பண மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளதால் நிரவ் மோடி இந்தியா செல்ல வேண்டும் என்று கோர்ட்டு கண்டிப்பாக கூறியது.
இந்த உத்தரவுக்கு எதிராக நிரவ் மோடி பிரிட்டன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிரவ் மோடி மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. இது இந்தியாவுக்கு மிகவும் சாதமாகும். எனவே கூடிய விரைவில் நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications