இங்கிலாந்தில் பரிசோதனையில் அதிர்ச்சி.. 3ல் ஒரு பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்ட அந்நாட்டு சுகாதாரத் துறை பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு அரசின் புதிய புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 778 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 12107 பேர் இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 5252 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்தமாக அங்கு 93873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்து இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதார பணியாளர்கள்
இங்கிலாந்து அரசால் திங்களன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள்" என்ற பிரிவில் அறிகுறி உள்ள்வர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுடன் வசிப்பர்கள் என 16888 பேருக்கு நடத்தப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் 5733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு (34 சதவீதம்) சுகாதாரத்துறை பணியாளர்களுககு கொரோனா வைரஸ் பாதித்திருப்பதாக இங்கிலாந்து அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பகுதியினர் நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளனர், புதிய பிரிட்டிஷ் அரசாங்க தரவு காட்டுகிறது.

இது இறுதியானதல்ல
எனினும் அறிகுறிகள் இல்லாத மற்றும் பரிசோதனை செய்வதற்கான இங்கிலாந்தின் அளவுகோல்கள்படி யாருடனும் வாழாத சுகாதார ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்படவில்லை. எனவே மேற்கண்ட 34 சதவீதம் என்பது இறுதியான விவரமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

சோதனை விரிவு
இதனிடையே சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான சோதனைகளை விரைவுபடுத்துவதற்கும், சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தி வழங்குவதிலும் (பிபிஇ) இங்கிலாந்து அரசு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. அறிகுறி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று இல்லாமல் அனைத்து சுகாதாரப்பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதே தங்கள் இறுதி இலக்கு என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் முன்பு கூறியிருந்தார்.

14 ஆயிரம் பரிசோதனை
ஆனால் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை அளவு பல ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைவாகவே உள்ளது. இந்த குறைவான சோதனைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஏப்ரல் 2 ம் தேதி பதிலளித்த சுகாதார செயலாளர் ஹான்காக், மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 10,000த்தில் இருந்து 100,000 சோதனைகள் வரை அதிகரிப்பதாக கூறினார். ஆனால் ஏப்ரல் 12 ம் தேதி நிலவரப்படி 14,506 கொரோனா வைரஸ் சோதனைகள் மட்டுமே நடந்ததாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன. இதன் மூலம் இங்கிலாந்து சோதனையை கடுமையாக அதிகரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications