இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார் - பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருக்கு வயது 99.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருக்கு வயது 99. வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.

Queen Elizabeth IIs husband Prince Philip dies aged 99

எலிசபெத் ராணி ஆவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பை 1947 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள் மற்றும் 10 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக பிலிப் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் அரண்மனைக்கு திரும்பினார்.

Queen Elizabeth IIs husband Prince Philip dies aged 99

மார்ச் மாதம் இதயப் பிரச்சினை காரணமாக பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர் வின்ஸ்டர் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை அவர் அங்கு மரணமடைந்தார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு அறிக்கையின் ராணியின் பிரியமான கணவர், அவரது ராயல் ஹைனஸ் தி பிரின்ஸ் பிலிப், எடின்பர்க் டியூக் இறந்ததை ராணி ஆழ்ந்த துக்கத்தோடு அறிவித்துள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+