Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணியின் இறுதி சடங்கு! குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ராணுவ உடை! இதுல இவ்வளவு ரூல்ஸ் இருக்கா

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி உடல் நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், அங்குப் பொதுமக்கள் குவிந்து உள்ளனர்.

பிரிட்டன் ஆட்சியில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். 1952 முதல் சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை வயது மூப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே மோசமடைந்து வந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் அவர் ஓய்வு எடுத்து வந்தார்.

இறுதி மரியாதை

இறுதி மரியாதை

இந்தச் சூழலில் தான் கடந்த செப். 8ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது உறவினர்கள் பலரும் அவரை பார்க்கச் சம்பவ அரண்மனைக்கு விரைந்தனர். அன்றைய தினமே ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் புதிய அரசராகப் பொறுப்பு ஏற்றார். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது.

நல்லடக்கம்

நல்லடக்கம்

ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. லட்சக் கணக்கான பொதுமக்கள் ராணி எலிசபெத் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இன்றைய தினம் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நாளில் அரசு குடும்பத்திற்கு உடை அணியவும் விதிகள் உள்ளன.

உடை

உடை

புதிய மன்னர் சார்லஸ் பதக்கங்களுடன் கூடிய சடங்கு சீருடையை இன்று நாள் முழுவதும் அணிவார். கடந்த 2012இல் ராணி அவருக்கு வழங்கிய சிவப்பு வெல்வெட் மற்றும் தங்க பீல்ட் மார்ஷல் கோலை எடுத்துச் செல்வார். ராணி எலிசபெத்தின் அனைத்து பிள்ளைகளும் ராணுவ உடைகளையே அணிந்து இருக்க வேண்டும். பேரன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையை அணிந்து இருப்பார்.

ஏன்

ஏன்

அரச குடும்பத்தின் பதவியில் இருக்கும் ஆண்கள் பாரம்பரியமாக இராணுவ சீருடைகளை அணிவார்கள், அதே சமயம் பதவியில் இல்லாத ஆண்கள் கருப்பு கோட்டுகளை அணிவார்கள். கடந்த ஆண்டு ராணியின் கணவர் அரசர் பிலிப் இறந்த போதும் இதேபோன்ற உடைகள் தான் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாரி

ஹாரி

அதேநேரம் இந்த இறுதிச் சடங்கில் இளவரசர் ஹாரி வெறும் கருப்பு நிற ஆடைகளை மட்டுமே அணிந்து இருந்தார். ஏனென்றால், அவர் ஏற்கனவே மன்னர் குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அரசு பதவியில் இல்லை என்பதால் இளவரசர் ஹாரியால் பாரம்பரிய ராணுவ உடையை அணிய முடியாது. அவர் சாதாரண கறுப்பு உடையில் தான் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்,

தலைவர்கள்

தலைவர்கள்

அதேபோல இறுதி சடங்கில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள் தங்கள் துக்கத்தை வெளிக்காட்டும் வகையில் கருப்பு ஆடைகளையே அணிந்து இருந்தனர். ராணியின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன், ஜப்பான் அரசு நரூஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+