பெரிய சிக்கல்.. ராணி எலிசபெத் மறைவால் 600 நிறுவனங்களுக்கு புதிய தலைவலி! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ராணி எலிசபெத் மறைவால் சுமார் 600 நிறுவனங்கள் பெரிய சிக்கலில் உள்ளன. அவை சீக்கிரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதன் விற்பனையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது

கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த எலிசபெத் கடந்த செப்.8ஆம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்து அரண்மனையில் ஓய்வெடுத்து வந்த அவர், அங்கேயே காலமானார்.

96 வயதான ராணி எலிசபெத்திற்குக் கடந்த சில மாதங்களாகவே மோசமான உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. வயது மூப்பு காரணமாக அவரால் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்று கூறப்பட்டது.

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

கடந்த செப்.8ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது உறவினர்கள் அனைவரும் விரைந்தனர். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் இந்திய நேரப்படி செப்.8 மாலை உயிரிழந்தார். ராணியின் மறைவு பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு இறுதிச் சடங்கு நாளை செப்.19ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது.

மறைவு

மறைவு

ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இறுதி மரியாதை செலுத்தப் பொதுமக்கள் சுமார் 24 வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. ராணி எலிசபெத் மறைந்ததைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். ராணி எலிசபெத்தின் மறைவு சுமார் 100 நிறுவனங்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

600 நிறுவனங்கள்

600 நிறுவனங்கள்

எலிசபெத் ராணியின் மரணம் காரணமாக சுமார் 600 நிறுவனங்கள் தங்கள் அரச வாரண்ட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. Cadbury சாக்லேட் நிறுவனம், துடைப்பம் மற்றும் நாய் உணவு நிறுவனங்கள் கூட அரசின் வாரண்ட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் புதிய மன்னரிடம் ஒப்புதலைப் பெறவில்லை என்றால் மன்னர் குடும்பத்திற்கு விருப்பமான சப்ளையர்கள் என்ற முத்திரையை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்த முத்திரை அகற்ற அவர்களுக்கு இரு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த முத்திரை என்பது பல நிறுவனங்கள் கவுரமாகக் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் சில நிறுவனங்கள் அதை தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்துகிறது. இந்த முத்திரை என்பது அதன் தரத்தைக் காட்டுவதாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசு குடும்பம்

அரசு குடும்பம்

அதாவது அரசு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை சப்ளே செய்யும் நிறுவனங்களுக்கு இதுபோன்ற முத்திரை வழங்கப்படும். மன்னர் குடும்பமே பயன்படுத்துகிறது.. அந்தளவு எங்கள் தயாரிப்புகள் தரத்தில் உயர்ந்து இருக்கிறது என்பதே கூறியே விற்பனையை அதிகரிக்க முயல்வார்கள். புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள சார்லஸ், இளவரசராக இருந்த போது மட்டும் சுமார் 150 நிறுவனங்களுக்கு இந்த அந்தஸ்தை வழங்கினார்.

கட்டாயம்

கட்டாயம்

இப்போது ராணி எலிசபெத் மறைந்துள்ள நிலையில், அவர் முத்தரை வழங்கிய 600 நிறுவனங்கள் மீண்டும் அதைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த ராயல் சீலை பெறுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. அரசு குடும்பத்திற்கு இந்த நிறுவனங்கள் கட்டணத்தை வாங்கிக் கொண்டோ அல்லது இலவசமாகவே பொருட்களை வழங்கலாம்.

எப்படி

எப்படி

அரசு குடும்பத்திற்கு இந்த பொருட்கள் பிடித்து இருந்தார், அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். மேலும், இதற்காக அந்த நிறுவனங்களுக்கு ராயல் சீலை தருவார்கள். இந்த ராயல் சீல் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+