லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டென சார்லஸ் செய்த காரியம்.. ஒருத்தரும் எதிர்பார்க்கல.. டக்குனு திரும்பிய சீக்கியர்கள்.. வாவ் செம

சீக்கியர்களின் பிரார்த்தனையில் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் பங்கேற்று சிறப்பித்தார்

Google Oneindia Tamil News

லண்டன்: மன்னர் சார்லஸ், இங்கிலாந்தே வியந்து போகும் வண்ணம், ஒரு காரியத்தை செய்துவிட்டார்.. அந்த வீடியோதான் பலரையும் ஈர்த்து வைத்து வருகிறது.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் இறுதி சடங்கின்போதே, அடுத்த மன்னர் சார்லஸ்தான் என்ற குரல்கள் ஒலித்தன.. எனவே, அரச குடும்பத்தை எதிர்த்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புதிய மன்னராக சார்லஸை பலர் ஏற்க மறுத்தனர்.. "என் அரசன் கிடையாது" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி பிடித்து முழக்கமிட்டனர்.

பேரறிவாளன் முதல் ஹிஜாப் வரை.. 2022ல் உச்சநீதிமன்றம் வழங்கிய 5 முக்கிய தீர்ப்புகள்! நீதி கிடைத்ததா? பேரறிவாளன் முதல் ஹிஜாப் வரை.. 2022ல் உச்சநீதிமன்றம் வழங்கிய 5 முக்கிய தீர்ப்புகள்! நீதி கிடைத்ததா?

இப்படி முழக்கமிட்டவர்களை எல்லாம் போலீசும் கைது செய்தது.. "யார் அவர்களை தேர்ந்தெடுத்தது?" என்று அரச குடும்பத்தை நோக்கி சைமன் ஹில் என்ற இளைஞர் ஓங்கி குரல் எழுப்பினார்.. அதன் தொடர்ச்சிதான், மன்னர் என்றும் பாராமல் அவர்மீது முட்டையை வீசிஎறிந்தனர்.. யார் முட்டையை எறிந்தார்கள் என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து பொருட்கள் சார்லஸ் மீது வீசப்பட்டு அவைகளும் உடைந்து சிதறின... மொத்தத்தில் முடியாட்சிக்கு பதிலாக குடியாட்சி வேண்டும் என்ற கூக்குரல்கள் வெடிக்க துவங்கி விட்டன.

விவிஐபிகள்

விவிஐபிகள்

இந்நிலையில், சார்லஸின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இங்கிலாந்து நாட்டில் ஏராளமான சீக்கியர்கள் வசித்து வருகிறார்கள்... இந்த சீக்கியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு குருத்துவாராவை கட்டி உள்ளார்கள்.. லண்டனை அடுத்த லூடனில் இந்த சீக்கிய குருத்துவாரா கட்டியிருக்கிறார்கள்.. இதற்கான திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள், விஐபிகள், சீக்கியர்கள் கலந்து கொண்டார்கள்.. இந்த விழாவுக்கு சார்லஸையும் அழைத்திருந்தனர்..

தரையில் உட்கார்ந்தார்

தரையில் உட்கார்ந்தார்

சீக்கியர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சார்லஸும், இந்த புதிய குருத்துவாராவுக்கு சென்றார். அங்கு நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார்... வழக்கமாக, அப்போது குருத்துவாராவில் சீக்கியர்கள் எப்போதுமே தரையில் அமர்ந்துதான், தங்கள் மரபை கடைப்பிடிப்பார்கள்.. அதுபோலவே, சார்லஸும் தரையில் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.. அவர்களின் பிரார்த்தனையிலும் பங்கேற்றார். லூடன் குருத்துவாராவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார் சார்லஸ்..

இசைக்கருவிகள்

இசைக்கருவிகள்

பிறகு, அங்கிருந்த இசைக்கருவிகளையும் பார்வையிட்டார். சீக்கிய குழந்தைகளுடனும் அவர் உரையாடினார்... அப்போது சில சீக்கிய குழந்தைகள் இசைக்கருவிகளை வைத்து கொண்டு நின்றிருந்தனர்.. அவர்களிடம் சென்ற சார்லஸ், இந்த கருவிகளை எல்லாம், எனக்கு வாசித்து காட்டுகிறீர்களா? என்று ஆர்வத்துடன் கேட்டு, அதனை அன்புடன் ரசிக்கவும் செய்தார்.. ஒரு மன்னர், இப்படி திடுதிப்பென தரையில் உட்கார்ந்துவிட்டாதே என்று இங்கிலாந்து மக்களே ஆச்சயரிப்பட்டனர்..

பூரிப்பு குஷி

பூரிப்பு குஷி

இதை பற்றி ஒரு அதிகாரி சொல்லும்போது, "உயிரிழந்த ராணிக்கு, சீக்கியர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.. அவர்களின் வழிபாடு மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.. ஆனால் ராஜ குடும்பத்தை சார்ந்தவர்கள் எதற்காகவும், எந்த காலத்திலுமே தரையில் உட்கார்ந்ததில்லை.. இப்போது மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் உட்கார்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது... இது வரலாற்று சிறப்பு மிக்கது என்று நெகிழ்ந்து கூறினார்..

English summary
Special news about charles and he visits gurudwara in uk sits on floor-with devotees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X