உயிருக்கு போராடிய ஆமை.. கடவுளாக மாறி காப்பாற்ற சுறா மீன் செய்த அதிசயம்.. வீடியோவை பாருங்க
லண்டன்: சுறா மீன் ஒன்று உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக படகில் சென்ற மனிதனிடம் வந்து விட்டு சென்றுள்ளது. இது தொடர்பான வீடியா ஒன்று சமூக வலைளதங்களில் வெளியாகி உள்ளது.
எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்று தெரிவில்லை. எப்போது எடுக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள கருத்துக்கள் மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டியவை ஆகும்.

பொதுவாக நாம் கடலை குப்பையாக பார்க்கிறோம். கழிவுகளை கொட்டும் இடமாக பார்க்கிறோம். எவ்வளவு மோசமான குப்பைகள், ஆயில்கள், அசுத்தங்களை கடலில் செய்து வருகிறோம். அங்கு வாழும் உயிரினங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை.
இந்த பூமி மனிதர்கள் மட்டும் வாழ்வதற்காக படைக்கப்படவில்லை. உலகின் ஒவ்வொரு உயிரினமும் வாழ வேண்டும். அதுவே இயற்கையின் நியதி. இதைமனிதன் மாற்ற முயற்சித்தால் இயற்கையின் கோரத்தாண்டவங்கள் எல்லா வகையிலும் வரும். இயற்கை ஒரு நாளில் தன்னை சமநிலை செய்து கொள்ள முடியும் என்பதற்கு பல பேரழிவுகள் சாட்சியாக உள்ளன.
ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சுறா ஒன்று உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்ற வேண்டி படகில் சென்ற மனிதனிடம் விட்டு சென்றுள்ளது.
நம்பமுடியாத செயல். கடலில் ஒரு படகைக்கண்ட சுறா,அதில் ஒரு இளைஞன் உள்ளதை பார்த்தபின் தன் வாயில் ஒரு ஆமையை கவ்விக்கொண்டு அப்படகில் ஏறும் ஏணியில் கொண்டுவந்து சேர்த்த பின் தான் இருந்தால் அவ்விளைஞன் அதை காப்பாற்ற முன் வரமாட்டான் என்று அறிந்து அவ்விடத்தை விட்டு அகன்றது. pic.twitter.com/LCO9fUyVrW
— Latha Nimo 😜லதா நிமோ😂 (@lathanimoji) June 12, 2023
இதை பற்றி லதா நிமோ என்பவர் வெளியிட்ட வீடியோ மற்றும் ட்வீட் பதிவில், " நம்பமுடியாத செயல். கடலில் ஒரு படகைக் கண்ட சுறா,அதில் ஒரு இளைஞன் உள்ளதை பார்த்தபின் தன் வாயில் ஒரு ஆமையை கவ்விக்கொண்டு அப்படகில் ஏறும் ஏணியில் கொண்டுவந்து சேர்த்த பின் தான் இருந்தால் அவ்விளைஞன் அதை காப்பாற்ற முன் வரமாட்டான் என்று அறிந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.
அதன்பின் அவ்விளைஞன் அந்த ஆமையை படகின் மேல் கொண்டு வந்து சோதனை செய்கையில் அதன் கழுத்தில் இரண்டு கயிறுகள் இறுக்கி ஆமை மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்தான். பின் கத்தியினால் அந்த கயிற்றை அறுத்து ஆமை மூச்சு விட செய்து பின் கடலிலேயே அவன் அந்த ஆமையை விடுவித்தான்.
இதை கவனித்து நோக்கினால் மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் சுறாமீன், மனிதனால் மட்டுமே மற்ற உயிரனங்களை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்துள்ளது. இதை நன்கு உணர்ந்து மனிதன் செயல்பட்டால் மட்டுமே இவ்வுலகை காப்பாற்ற முடியும்" இவ்வாறு அந்த பதிவில் லதா நிமோ என்பவர் கூறியுள்ளார்.
உண்மையில் அந்த வீடியோவில் சொல்லியுள்ள இன்னொரு முக்கியமான விஷயம், மனிதர்களாகி நாம் பாலித்தீன் உள்பட பல்வேறு குப்பைகளை கொட்டுகிறோம். இதனால் கடலில் வாழும் விலங்குகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு சாட்சி. கடலிலில் உள்ள உயிரினங்கள் அதிக அளவு இறந்து போனால், அது எந்த அளவிற்கு இயற்கை சமநிலை பாதிக்கும் என்பதை நாம் உணரவில்லை என்றால், வரும் காலம் நமக்கும், நமது சந்ததிக்கும் பேராபத்தை தான் நிச்சயம் தரும். இப்போதே வெயில், மோசமான மழை, வறட்சி என்று மாறி மாறி தாக்கி வருகிறது. இதை உணர்ந்து நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications