கொரோனாவை தடுக்க ஒரு டோஸ் போதும்.. ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன்.. முக்கியமானது ஏன்
லண்டன்: கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தும் வகையில் ஜான்சன் & ஜான்சன் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து இதுவரை எந்த நாடும் முழுமையாக மீளவில்லை. இதிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

பிரிட்டன்
குறிப்பாக, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே தடுப்பூசி பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையானது. அங்குத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள இதுவரை பைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Array
இந்நிலையில் நான்காவது தடுப்பூசியாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்குப் பிரிட்டன் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசு இதுவரை 2 கோடி ஜான்சன் தடுப்பூசிக்கு ஆர்டர் அளித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவல் பற்றிய அச்சம் பிரிட்டனில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது 4ஆவது தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியமானது
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி சிங்கிள் டோஸ் தடுப்பூசியாகும். அதாவது, பைசர் மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலஇடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் அளித்தால் போதும். இதன் மூலம் அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி அளிக்க முடியும். மேலும், ஊசிகள், சிரஞ்சுகள் போன்ற மருத்துவ கழிவுகளும் குறையும். ஜான்சன் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 72% வரை குறைப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பணிகள்
பிரிட்டன் நாட்டில் இதுவரை 6.2 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளே அங்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி பணிகள் மூலம் பிரிட்டன் நாட்டில் சுமார் 13 ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications